ஷாப்பிங்கின்போது சங்கடம்... 'கிளீவேஜை' மறைக்கப் போராடிய கிம் கர்தஷியான்!

|

Kim Kardashian Grapples With Her Cleavage Baring Dress   

நியூயார்க்: நியூயார்க்கில் தனது காதலர் கென்யே வெஸ்ட்டோடு ஷாப்பிங் போன கிம் கர்தஷியான் தான் போட்டிருந்த டைட்டான உடை காரணமாக, தனது மார்பகம் முழுமையாக வெளியே தெரியாமல் மறைக்க கடுமையாகப் போராட வேண்டியதாகி விட்டது.

முன்னழகை எப்படியெல்லாம் வெளியே காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டும் வகையிலான உடை அணிவதில் கில்லாடி கிம். ஆனால் அப்படிப்பட்ட அவரே தனது முன்னழகு முழுசாக வெளியே தெரிந்து விடாத வகையில் உடையை சரி செய்யப் போராடிய காட்சியை நியூயார்க்கில் பார்க்க நேர்ந்தது.

அங்குள்ள ஜெப்ரி என்ற டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு காதலர் கென்யே வெஸ்ட்டுடன் வந்தார் கிம். அப்போது வழக்கம் போல படு க்யூட்டான டிரஸ்ஸை அணிந்திருந்தார். கருப்பு நிறத்திலான அந்த டிரஸ்ஸில் அவரது முன்னழகு பளிச்சென தெரிந்தது.

மிகவும் டைட்டான உடை என்பதால் அவரது முன்னழகு கிட்டத்தட்ட முழுமையாக தெரியும் அளவுக்கு காணப்பட்டது. இதைப் பலரும் வேடிக்கை பார்த்தனர். ஆனால் கிம்முக்குத்தான் என்றும் இல்லாத அளவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்று விட்டது. இதனால் தனது உடையை சரி செய்து கிளீவேஜ் வெளியே தெரியாத வகையில் பார்த்துக் கொண்டார். அவ்வப்போது தனது உடையை சரி செய்வதிலேயே அவருக்கு நேரம் போய் விட்டது. அடிக்கடி மேலாடையை இழுத்து விட்டபடியும், அவ்வப்போது சரியாக இருக்கிறதா என்று பார்த்தபடியும் அவர் ஷாப்பிங் செய்தார்.

இந்த பரபரப்பில் கிம் போட்டிருந்த அட்டகாசமான ஷூவை பலரும் பார்க்கத் தவறினர். சமீபத்தில்தான் டிசைனர் ஷூக்கள் 100 ஜோடியை வாங்கியிருந்தார் கிம். அத்தனையும் விலை உயர்ந்தவை, பேகி பேன்ட் போன்ற வடிவிலான ஷூ அவை. அருமையான டிசைன் கொண்டவை. அதில் ஒன்றைத்தான் அன்று போட்டிருந்தார் கிம்.

ஆனால் ஷூவை யார் பார்த்தார்கள்...!

 

Post a Comment