நடிகை மனீஷா கொய்ராலா இப்போது மதுவிருந்துகளைத் தவிர்த்துவிட்டதாகவும், இதனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், சாம்ரட்டஹலுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது.
சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மனிஷா கொய்ராலா மும்பையில் தனியாக வசிக்கிறார். தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகும் மனிஷா கொய்ராலா தொடர்ந்து மதுவிருந்துகளில் பங்கேற்று தள்ளாடித் தடுமாறி, செய்திகளில் இடம்பெற்று வந்தார்.
இதனால் அவரது இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது.
இந்த நிலையில் இப்போது தான் ரொம்ப மாறிவிட்டாகக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "நான் ரொம்ப மாறிட்டேன். எதற்கும் ஆசைப்படுவதில்லை. விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். இப்போது வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மனஅமைதியை கொடுக்கிறது. இதனால் என் உடல் நிலையிலும் நல்ல ஆரோக்கியத்தை உணர்கிறேன்," என்றார்.
Post a Comment