நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்... இது நாளை மறுதினம் வெளியாகவிருந்த ஒரு படத்தின் தலைப்பு.
விஜய் சேதுபதி, காயத்ரி, தனலட்சுமி நடித்துள்ள இந்தப் படத்தை பாலாஜி தரணிதரன் என்ற புதியவர் இயக்கியுள்ளார். வேத் சங்கர் இசையமைத்துள்ளார்.
நேற்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. பின்னர், ஒரு மணி நேரம் கழித்து இயக்குநர்கள் மற்றும் திரையுலகினருக்கான காட்சியும் நடந்தது.
படம் பார்த்த அனைவரும் பாராட்டித் தள்ளினர்.
விஐபி காட்சிக்கு வந்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'இந்தப் படம் ரொம்ப ப்ரெஷ்ஷாக இருந்தது. அருமையாக செய்திருந்தனர். பாராட்டுக்கள்," என்றார்.
பத்திரிகையாளர்கள், விமர்சகர்களும் படத்தைப் பாராட்டிய நிலையில், இதன் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
அநேகமாக இரு வாரங்களுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகக் கூடும்.
Post a Comment