இதையடுத்து சூர்யா நடிக்க ஹரி இயக்கும் 'சிங்கம் 2' படத்தில் நடித்தார். அவர் நடித்த காட்சி சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது. இதுபற்றி ஹரி கூறும்போது,'உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே ஆச்சி (மனோரமா) யிடம் சிங்கம் 2 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். முதல்பாகத்தில் ஏற்ற வேடமே ஏற்கிறீர்கள். நிச்சயம் குணம் அடைந்து ஷூட்டிங் வருவீர்கள் என்றேன். அதன்படி அவர் குணம் அடைந்தார். அவர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. குணம் அடைந்தபிறகு முதல் முறையாக எங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அவரை பட யூனிட்டே கரவொலி எழுப்பி வரவேற்றது. வழக்கம்போல் அவர் தனது காட்சிகளை மிக எளிதாக நடித்து முடித்தார். அடுத்த வருடம் படம் ரிலீஸ் ஆகிறது' என்றார்.
Post a Comment