கிசு கிசு - ஆசைப்படும் இயக்கம் பொறுத்த ஹீரோயின்

|

Desires director நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

வன்முறை, கவர்ச்சி படங்களை சென்சாருக்கு திரையிடும்போது சில படங்களுக்கு  சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுகிறதாம்... மறுக்கப்படுகிறதாம்... ஆனால் அதேபடம் ரிவைசிங் கமிட்டியிடம் சான்றிதழுக்காக திரையிடும்போது சில 'கட்'களுடன் சான்றிதழ் தரப்படுகிறதாம். இதால தணிக்கை குழுவினருக்கும், ரிவைசிங் கமிட்டிக்கும் இடையே மோதல் உருவாகுதாம். கள்ள கன் படத்துக்கு சமீபத்துல இந்த பிரச்னை வந்துச்சாம். அதேபோல் டோலிவுட்லயும் ஒரு படத்துக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுச்சாம். சென்சார் குழு உறுப்பினர்களின் கருத்து வேறுபாடு உயர் அதிகாரிகளுக்கு மனவருத்தம் தந்திருக்கிறதாம்... இருக்கிறதாம்...

மில்க் இயக்கம் படத்துல நடிச்சவங்களுக்கு மேக்கப் போடச் சொன்னதும் அதிர்ச்சியாயிட்டாங் களாம்... ஆயிட்டாங்களாம்... ஹீரோ, ஹீரோயினுக்கு கருப்பு சாயம் பூசி கலரையே மாத்திட்டாங்களாம். அடுத்து காஸ்ட்யூம் கொடுத்தப்ப டபுள் ஷாக் ஆயிட்டாங்களாம். அதுவும் அழுக்கடைந்த கந்தல் துணிதானாம். இந்த துணிய ஷூட்டிங் முடியறவர துவைக்கக்கூடாதுனு இயக்கம் கண்டிஷன் போட்டாராம். இதுல வாயடைச்சி போன ஹீரோவும், ஹீரோ யினும் அதுபத்தி வெளியில மூச்சுவிடாம தம்கட்டி பொறுத்துகிட்டாங்களாம்... பொறுத்துகிட்டாங்களாம்...

தேவியான ஸ்ரீ இசை இயக்கத்துக்கு மனசுக்குள்ள நடிப்பு ஆச ஒளிஞ்சிட்டிருக்காம்... இருக்காம்... ஸ்டேஜ்ல ஆடிகிட்டே பாட்ற அவரோட டேலன்ட்ட பாத்த சில இயக்கங்க நடிக்கறதுக்காக கூப்பிட்டாங் களாம். நடிக்கறதா இருந்தா மழை ஹீரோயினோடதான் நடிப்பேன்னு இசை இயக்கம் கண்டிஷன்
போட்டிருக்காராம்... இருக்காராம்...
 

Post a Comment