விவாகரத்தானவரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி!

|

பெங்களூர்: ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான தொழில் அதிபர் அனந்த கவுடாவை மணக்கிறார் பிரபல நடிகை பூஜா காந்தி.

இருவருக்குமான திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள பூஜா காந்தி வீட்டில் நேற்று நடந்தது. வருகிற மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

2003-ம் ஆண்டு அறிமுகமானவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னட படங்களில் நடித்த அவர், தமிழில் கொக்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.

pooja gandhi engaged   
Close
 
'தண்டுபாளையா' படத்தில் சங்கிலி தொடர் கொலையாளிகளில் à®'ருவராக நடித்த அவர், சில காட்சிகளில் அரை நிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.

சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அவருக்கு நாட்டம் உண்டு. ஜனதா தளம்(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் அழைப்பை ஏற்று பூஜாகாந்தி அரசியலில் குதித்தார்.

குமாரசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காக பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் பூஜா காந்தி பற்றி தவறான பிரச்சாரம் வெளியாக தொடங்கின. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘சொந்த நலனை கருத்தில் கொண்டு கட்சியை விட்டு விலகி கொள்ளும்படி' பூஜா காந்தியை குமாரசாமி கேட்டு கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சமீப காலமாக பூஜாகாந்தி பங்கேற்காமல் இருந்தார்.

இந்த நிலையில் பூஜா காந்திக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். பைனான்ஸ் தொழில் செய்து வருபவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஆனந்த்கவுடாவுக்கும், பூஜா காந்திக்கும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனந்த் கவுடா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பண்டரி பாயின் பேத்தியை மணந்தார். பிறகு அவர்களுக்கு விவாகரத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமண நிச்சயதார்த்த விழா பெங்களூர் கத்திரிகுப்பேயில் உள்ள பூஜா காந்தியின் வீட்டில் நேற்று காலை நடந்தது.

பூஜைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சுமார் 10.30 மணி அளவில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரைப்பட உலகை சார்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பூஜாகாந்தியின் பெற்றோர், அவருடைய தங்கை மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமணம் வருகிற மார்ச் மாதம் நடைபெறுகிறது.

 

Post a Comment