நயன்தாராவின் ஜொலிக்கும் அழகின் ரகசியம் என்ன?

|


Secret Nayanthara S Glowing Skin  
சென்னை: நடிகை நயன்தாரா பார்க்க பளிச்சென்று இருக்க கேரளாவின் ஆயுர்வேத மருத்துவம் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நயன்தாரா தனது மறுபிரவேசத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார். பிரபுதேவாவை விட்டுப் பிரிந்த நயனுக்கும், ஆர்யாவுக்கும் காதல் என்று பேச்சு கிளம்பியது. அதை எல்லாம் அவர் கண்டுகொள்வதாகவே இல்லை. பேசுபவர்கள் பேசட்டும் நான் என் வேலையை மட்டும் பார்க்கிறேன் என்று உள்ளார்.

நயன்தாரா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் எப்பவும் மினுமினுப்பாகவே இருக்கிறார். அதற்கு காரணம் சேச்சி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து அழகைக் கூட்டிக் கொள்கிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் கேரளா சென்று அங்கு 4 நாட்கள் தங்கி அழகை மெருகேற்றிவிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது நயன் ஆர்யாவுடன் ராஜா ராணி, அஜீத் குமாருடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
 

Post a Comment