நடிகையை பச்சைக்குதிரை தாண்டியபோது விவேக்குக்கு சுளுக்கு!

|

Actor Vijay Injured At Shooting

சென்னை: பத்தாயிரம் கோடி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விவேக் காயமடைந்தார்.

நடிகர் விவேக் ஹீரோவாக நடிக்க முக்தா சீனிவாசனின் மாயா கிரியேஷன்ஸ் படநிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை சீனிவாசன் சுந்தர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடி என்ற இடத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

à®'ரு பெண்ணை, நடிகர் விவேக் பச்சைக் குதிரை தாண்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நடிகர் விவேக் தவறி விழுந்தார்.

அதனால் அவரது வலது காலில் தசை சுளுக்கு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக தனியார் ஆஸ்பத்திரி à®'ன்றில் சிகிச்சைக்கு சேர்த்தனர். படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து விவேக் à®"ய்வில் இருக்கிறார். à®"ரிரு நாளில் குணமடைந்தபின் ‘பத்தாயிரம் கோடி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment