அஜீத் மனைவி ஷாலினிக்கு இன்று பிறந்தநாள்: வயது 32

|

சென்னை: நடிகர் அஜீத் குமாரின் மனைவி ஷாலினி இன்று தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ajith s better half turns 32 today
Close
 
ஷாலினி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக 80 படங்களில் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு ஹீரோயினான ஷாலினி அமர்க்களம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அஜீத்தை மணந்த பிறகு ஷாலினி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார்.

ஷாலினி நடிக்காவிட்டாலும் தற்போது பேட்மின்டன் போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் ஷாலினியின் ஜோடியான பிரியா அண்மையில் மிர்சி சிவாவை மணந்தார். பிரியாவுக்கும் இன்று தான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. எங்கள் 'தல'யின் மனைவி ஷாலினி அக்காவுக்கும், எங்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் மனைவி பிரியா அக்காவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் பிரேம்ஜி அமரன் டுவீட் செய்துள்ளார்.

 

Post a Comment