சிங்கள மொழியில் டப் ஆகும் தமிழ் படம்

|

Is a Tamil film dubbed in Sinhala language தமிழில் உருவாகும் 'கபடம் படம் சிங்கள மொழியில் டப் ஆகிறது. சச்சின், வங்காள பெண் அங்கனா ராய் நடிக்கும் படம் 'கபடம். இப்படத்தை ஜோதி முருகன் இயக்குகிறார். அவர் கூறியது: செல்வராகவன், சிம்புதேவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இருவரது பாணியும் வெவ்வேறு கோணம் கொண்டது. இப்படத்தை பொறுத்தவரை அவர்களது பாணியிலிருந்து மாறி ஸ்கிரிப்ட் அமைத்துள்ளேன். 'கபடம் காதல் சஸ்பென்ஸ் கதையாக உருவாகி இருக்கிறது.

ஜோடி ஒன்றுக்கிடையில் ஏற்படும் கலாசார பாகுபாடு அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்ற கருவை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருக்கிறது. யாதுமாகி படத்தில் நடித்த சச்சின் ஹீரோ. அங்கனா ராய் ஹீரோயின். சோழா பொன்னுரங்கம் தயாரிக்கிறார். சதீஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஹீரோ சச்சின் இலங்கையில் பிறந்தவர். தமிழ்நாட்டில் வளர்ந்தார். ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவர். கபடம் படம் தெலுங்கில் கபடா என்ற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு ஜோதி முருகன் கூறினார். இப்படம் சிங்கள மொழியில் டப்பிங் ஆகிறது என்று பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

Post a Comment