பாக்யராஜ் படம் பார்க்கணுமா? 11 மணிக்கு சன் டிவி பாருங்க!

|

Sun Tv Celebrates K Bhagyaraj Week

சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம் தொடங்கியுள்ளது. இரவு 11 மணிக்கு நடித்த தூறல் நின்னு போச்சு, மௌனகீதங்கள் போன்ற பிரபலமான படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் உண்டு. ஆண் ரசிகர்களைப் போல பெண் ரசிகர்களும் அதிகம் உண்டு. அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமாச்சாரம் இருக்கும். இன்றைக்கும் டிவியில் பாக்கியராஜ் படம் போட்டால் அது ரசித்து பார்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ரசிக்கும் படியாக இருக்கும்.

சன் டிவியில் இந்தவாரம் இரவு 11 மணிக்கு பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர். இன்று இரவு ருத்ரா, புதன்கிழமை இரவு தூறல் நின்னு போச்சு படம் ஒளிபரப்பாகிறது.

1982லேயே வரதட்சணை கொடுமை பற்றி கூறிய படம் 'தூறல் நின்னு போச்சு'. நம்பியாரை வில்லான பார்த்த தமிழ் ரசிகர்கள் இதில் வித்தியாசமான கெட்டப்பில் பார்த்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனவை. நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படம் இது. வியாழக்கிழமை இரவு இன்று போய் நாளை வா என்ற நகைச்சுவை படமும் வெள்ளிக்கிழமை இரவு அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான மௌனகீதங்கள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மௌனகீதங்கள் படத்தில் பாக்யராஜ், சரிதா ஜோடி கெமிஸ்ட்ரி சூப்பர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தினசரி 11 மணிக்கு தூக்கம் வராமல் இருந்தால் பாக்யராஜ் படங்களை பார்த்து ரசியுங்களேன்.

 

Post a Comment