சோனாவுக்கு நாங்க இருக்கோம்.. வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்த பெண்கள் இயக்கம்!

|

Women Forum Extends Support Sona

சென்னை: ஆண்களை இழிவுபடுத்திப் பேசிய சோனாவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று பெண்கள் பாதுகாப்பு சங்கம் முன்வந்துள்ளது.

செக்ஸ் விஷயத்தில் ஆண்களை துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பராக மட்டுமே தான் உபயோகிப்பதாக நடிகை சோனா பேட்டியளித்திருந்தார். இதனைக் கண்டித்து ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.

இப்போது போராட்டம் நடத்திய ஆண்களை எதிர்த்து, பெண்கள் சங்கம் களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவரும் மனித உரிமை கழக சர்வதேச அமைப்பு மகளிர் அணி நிர்வாக செயலாளருமான கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகை சோனா வீட்டில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஆண்கள் பற்றி அவதூறாக பேசவில்லை என்று சோனா மறுத்து விட்டார். வருத்தமும் தெரிவித்து விட்டார். அதன்பிறகும் அவருக்கு எதிராக போராடுவது முறையல்ல.

அதுவும் ஒரு பெண்ணை கண்டித்து அவர் வீட்டில் இத்தனை ஆண்கள் குவிந்து கோஷம் போடுவது ஏற்ககூடியது அல்ல. சூர்யா படத்தில் பெண்களை நம்பி கெட்டுபோனவர் பலர் என்று பாடல் வந்துள்ளது. தனுஷ், சிம்பு படங்களிலு2ம் பெண்களுக்கு எதிரான பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதை நாங்கள் சினிமாவாக பார்க்கிறோம். எனவேதான் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடவில்லை.

சோனா இழிவாக பேசி இருப்பதாக கருதினால் கோர்ட்டுக்கு செல்லலாம். அதை விடுத்து ஒரு பெண் என்றும் பாராமல் கண்டன போராட்டங்கள் நடத்துவது அவரது வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆண்களுக்கு சங்கம் தேவையில்லை. பெண்கள்தான் சமூகத்தில் பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். சோனாவை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். போராட்டம் தொடருமானால் சோனாவுக்கு பெண்கள் இயக்கம் பாதுகாப்பு அளிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment