கிசு கிசு - ஹீரோயின் விஷயத்தில் ஹீரோ தலையீடு

|

Kodmbakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

கோலிவுட்டோ டோலிவுட்டோ இயக்கம் முடிவு செஞ்ச பிறகும் ஹீரோயின் விஷயத்தில் தலையிடுகிறாராம் சித்தாத்த ஹீரோ. இப்படி நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்களாம். கோலிவுட்டில் கண்ட நாள் படத்துல நடிச்ச ரெஜினாவான ஹீரோயின் டோலிவுட்டில் புக் ஆனாராம். ஆனா சித்தாத் ஹீரோ தலையீட்டால் தன்னுடைய வாய்ப்பு வேற ஹீரோயினுக்கு போயிடுச்சின்னு புலம்புறாராம்... புலம்புறாராம்...

கல்யாணம் முடிஞ்ச கையோட தேனிலவுக்கு போவாருன்னு சிவ ஹீரோவோட பிரெண்ட்ஸுங்க எதிர்பாத்தாங்களாம்... எதிர்பார்த்தாங்களாம்... ஆனா கையில படங்கள வச்சிட்டு ஊருக்குபோனா ஷூட்டிங் பிரேக்காகும். இருக்கற போட்டில வேற ஹீரோவ தேட ஆரம்பிச்சிட்டாங்கன்னா சான்ஸ் நழுவிடும்னு தேனிலவு திட்டத்த கைவிட்டுட்டாராம்... கைவிட்டுட்டாராம்... அவுட்டோருக்கு கௌம்பனா அங்கேயே தேனிலவ வச்சிக்கலாம்னு ஹீரோ முடிவு பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...

கன் படத்துக்கு வந்த பிரச்னைய பாத்த வேல்டு ஹீரோ தன் படத்துக்கு எதிர்ப்பு வராதளவுக்கு சீனுகள மாத்துறாராம்... மாத்துறாராம்... ஏற்கனவே படத்துக்கு சென்சார், சர்டிபிகேட் கொடுத்துருச்சாம். ஆனாலும் பிரச்னை கௌம்பும்னு நெனக்கற சீனுகளை மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு அதுக்கு புதுசா பர்மிஷன் வாங்க பிளான் பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்...
 

Post a Comment