மும்பை: நடிகர்கள் குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
மனதில் தோன்றுவதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று போட்டு உடைப்பவர்களில் பாலிவுட் நடிகை கரீனா கபூரும் ஒருவர். நடிகர், நடிகைகள் தங்கள் படங்களை விளம்பரப்படுத்த பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கின்றனர். அங்குள்ள மால்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.
இது குறித்து கரீனா முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,
நடிகர்கள் தற்போது குரங்குகளைப் போல் மாறி வருகிகன்றனர். உயரமான கட்டிடங்களில் இருந்து தங்கள் படங்கள் பற்றி விளம்பரம் என்ற பெயரில் அலறுகின்றனர். தபாங் 2 படம் நன்றாக வந்துள்ளது. அதை விளம்பரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள். பிரகாஷ் ஜாவின் சத்யாகிரஹா படத்தில் பத்திரிக்கையாளராக வருகிறேன். ஆனால் அதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கமாட்டேன். ஆமீர் கானுடன் நான் நடித்துள்ள தலாஷ் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை விளம்பரம் செய்யும் எண்ணம் இல்லை என்றார்.
நடிகர்களை குரங்குகள் என்று கரீனா கூறியது கேட்டு அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகிறார்களோ!
Post a Comment