விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிய பிரகதிக்கு ஜி.வி.பிரகாஷ் வாய்ப்பு

|

Super Singer Junior Pragathi Paradesi

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தியாசமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த பிரகதியை தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதிப்போட்டியில் பாடுவதற்காக நடுவர்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் பிரகதி. அமெரிக்காவில் வசித்துவரும் பிரகதி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சென்னைக்கு வந்து தங்கியிருந்தார். இப்போது இவருக்கு ஜி.வி.பிரகாஷ் இசையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 

+ comments + 1 comments

Anonymous
1 November 2012 at 12:08

அடிச்சானாம் பிறையிஸ் பிரகதி. நல்ல காலம் ஜி,வி.பிரகாஷ் ஏற்கனவே கல்யாணம் பண்ண பொண்ணு ரெடி. இல்லை என்றால் ஒரு கிசு கிசு கிளப்பி விடுவாங்க.

Post a Comment