மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலம் எடுத்த லேடி காகா

|

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகப்புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்களை பாப் பாடகி லேடி காகா ஏலத்தில் எடுத்துள்ளார்.

பாப் இசைச் சக்கரவர்த்தி என்று அவருடைய ரசிகர்களால் புகழப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகம் முழுவதும் பலகோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். உடல்நலக்குறைவினார் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.

lady gaga buys michael jackson item at auction

மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தாலும் அவரது புகழ் இன்னமும் மறையவில்லை என்பதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டது. மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த உடைகள், இசை நிகழ்ச்சிகள், பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் போன்றவை ஏலம் விடப்பட்டன.

இந்த ஏல நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பங்கேற்றனர். பிரபல பாப் இசைப்பாடகி காகா, மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலத்தில் எடுத்தார். மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகை என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார் லேடி காகா.

மைக்கேல் ஜாக்சனின் வெள்ளை நிற க்ளவுஸ் ஒரு லட்சத்து 92 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது. அதேபோல் அவர் அணியும் அழகிய சட்டை ஒன்று 2 லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கு விற்பனையானது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த நிதியில் ஒரு பகுதியை நலத்திட்ட உதவிகளுக்காக செலவிடப்படும் என ஏலம் நடத்திய ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Post a Comment