சென்னை:விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் முதலில் டிவியில் வெளியிடுவதில் கமல் தீவிரமாக இருப்பதால், அவருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் திரள ஆரம்பித்துள்ளனர்.
விஸ்வரூபம் மற்றும் கமல் மீது அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வதென முடிவு செய்ய இன்று திரையரங்கு உரிமையாளர்களின் அசாதாரண கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், "கமல் ஹாஸனின் முடிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் சீரியஸான விவகாரம். சினிமா தியேட்டர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதால், அசாதாரண கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். இன்று மாலை கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்," என்றார்.
ஆனால் இதற்கெல்லாம் மசிகிறவர் இல்லை கமல். அவரைப் பொறுத்தவரை, படம் அவருடைய சொந்தத் தயாரிப்பு. அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யும் உரிமையும் அவருக்கே உண்டு என்பதால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் வேலையில் இறங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு படைப்பாளிகள் - பெப்சி விவகாரம் வெடித்தபோதுகூட கமல் தன் முடிவை வெளிப்படையாக அறிவித்து பெப்சி தொழிலாளர்கள் பக்கம் நின்றார். அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு அப்போதும் நிலைமை சீரியஸாகி, பின் புஸ்வாணமானது நினைவிருக்கலாம்.
+ comments + 1 comments
ha ha ulaganayagan na ulaganayagan dhan
Post a Comment