சென்னை: காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன் நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.
வென்னிலா கபடிக் குழு படத்தில் சரட்டுமேனிக்கு பரோட்டா சாப்பிட்டு புகழ்பெற்றவர் சூரி. இந்த காட்சி மிகவும் பிரபலமானதை அடுத்து அவர் பெயரே பரோட்டா சூரியாகிவிட்டது. மூன்றோடு நான்காவது காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவின் நண்பர் என்ற ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். சூரி தனது வாழ்க்கையில் வென்னிலா கபடி குழு படத்தை மறக்க மாட்டார் என்று தெரிகிறது.
இந்த படத்தின் ஞாபகமாக தனது மகளுக்கு வென்னிலா என்று பெயர் வைத்துள்ளார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் சூரி சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது, காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன்... நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று தெரிவித்துள்ளார்.
சூரி இதுவரை அஜீத்துடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இனி வரும் காலத்தில் அவர் தனக்கு பிடித்த அஜீத்துடன் நடிக்கட்டும்.
Post a Comment