ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியது எஸ் மதனின் வேந்தர் மூவீஸ்.
ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி, கோவை சரளா, ஏ வெங்கடேஷ் உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் பாகன்.
ஸ்ரீகாந்த் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில். தமிழ் சினிமாவில் தனக்கு மிகப் பெரிய திருப்பு முனையை இந்தப் படம் தரும் என நம்புகிறார் ஸ்ரீகாந்த்.
அவருடன் பரோட்டா சூரி காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அஸ்லம். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஸ்வாய் யு லாட் மற்றும் வி புருஷோத்தமன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரிவியூ பார்த்த வேந்தர் மூவீஸ் எஸ் மதன், படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறி, அதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார். விரைவில் பாடல் வெளியீடு நடக்கிறது.
வரும் செப்டம்பரில் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கிறது பாகன்.
Post a Comment