'பாகனி'ல் பாடகராக மாறிய 'பரோட்டா' சூரி!

|

Parotta Suri Pandi Turn Singers Paagan Aid0136

தமிழ் நகைச்சுவை நடிகர்களுள் ரொம்ப டீஸன்டானவர், வேகமாக வளர்ந்து வருபவர் என்ற பெயரைப் பெற்றுள்ளவர் பரோட்டா சூரி. சந்தானம், விவேக் போன்றவர்களை அணுகமுடியாதவர்களின் இப்போதைய சாய்ஸ் சூரி.

அடுத்து தான் நடிக்கும் ஒரு படத்தில் பின்னணிப் பாட்டு பாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார் சூரி.

வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் 'அவன் இவன்' ஜனனி நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.

முழு நீள காமடிதான் படத்தின் களம். காஞ்சனாவில் பட்டையை கிளப்பிய கோவை சரளா இந்தப் படத்தில் ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், வெண்ணிலா கபடிக்குழு சூரியும், அங்காடித்தெரு பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

நடித்ததோடு மட்டுமில்லாமல் நச்சென்று ஒரு குத்துப் பாடலையும் பாடியுள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஸ்ரீகாந்துக்காக பாடப்பட்ட அந்தப் பாடலின் ஆரம்பம் இப்படி அமைந்துள்ளது...

"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
அக்சுவலா பம்பருதான்

நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேலைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"

என்ற பாடலை முதல் முதலாக பாடியுள்ளனர் சூரியும், பாண்டியும்.

ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் படத்தில் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் இப்பாடலை பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.

 

Post a Comment