கும்பமேளாவுக்கு வருகிறார் கேத்தரின் ஜெடா-ஜோன்ஸ்

|

Catherine Zeta Jones Visit Kumbh Mela

டெல்லி: அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகிறார் ஹாலிவுட் ஹாட் நடிகை கேத்தரின் ஜெடா ஜோன்ஸ்.

43 வயதாகும் ஜெடா ஜோன்ஸ், டிவி நடிகையாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் நாடகங்கள், திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர். ஏற்கனவே ஒரு முறை இந்தியா வந்துள்ள அவர் மீண்டும் தற்போது இந்தியா வரவுள்ளார்.

அலகாபாத்தில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் கும்பமேளா இப்போது நடந்து வருகிறது. இதைக் காண வரப் போவதாக ஜெடா ஜோன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தால் பாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று ஆவலோடு கூறியுள்ளார் ஜெடா ஜோன்ஸ்.

வெங்கட்பிரபு கிட்ட சொன்னா ஏதாச்சுசம் ஏற்பாடு பண்ணித் தருவாரே ஜோ...!

 

Post a Comment