யார் யார் கூடவோ என்னைச் சேர்த்து எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில் என்னுடைய காதலி, இயக்குநர் செல்வராகவனின் 1 வயது மகள்தான். அவளுடன்தான் நான் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறேன், என்கிறார் ஆர்யா.
ஜோடியாக நடித்த பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டவர் ஆர்யா. நான் கடவுள் சமயத்தில் பூஜாவுடன் நெருக்கமாக உள்ளார் ஆர்யா என்றார்கள். இப்போது நயன்தாராவை இணைத்துப் பேசுகிறார்கள்.
நயன்தாராவை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் எனும் அளவுக்கு இந்த கிசுகிசு வளர்ந்திருக்கிறது.
இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது மறுத்தார். நடிகைகளுடன் இணைத்து தன்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருவது வருத்தமாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஆர்யா, "உண்மையில் நான் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவிடுவது, இயக்குநர் செல்வராகவனின் 1 வயது மகள், அழகுக் குழந்தை லீலாவுடன்தான். என் மனதைக் கொள்ளை கொண்ட தேவதை இந்தக் குழந்தைதான்.இப்போதைக்கு என் காதலி அவள்தான். இந்த உண்மையை வேண்டுமானால் எழுதிக் கொள்ளுங்கள்," என்றார்.
Post a Comment