சைக்கிளுடன் ஒரு காதல் - பாகன் பற்றி ஸ்ரீகாந்த்

|

He Romances His Bicycle Srikanth Interview   

ஷங்கரின் நண்பனுக்குப் பிறகு என் சினிமா பயணம் புதிய பரிமாணத்துக்கு மாறியிருக்கிறது என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

நண்பனுக்குப் பிறகு, ஸ்ரீகாந்த் நடிப்பில் வரும் படம் பாகன். இதில் அவர் சோலோ ஹீரோ.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்முடன் ஸ்ரீகாந்த் பேசியதிலிருந்து..

பாகன் ஒரு ரொமான்டிக் காமெடி படம். இயக்குநர் அஸ்லம் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படத்தில் தந்திருக்கிறார். நிச்சயமாக நீங்கள் என்ஜாய் பண்ணும் அளவுக்கு படம் இருக்கும்.

பாகன் என்றால் யானை உடனே நினைவுக்கு வரும். ஆனால் இங்கே சைக்கிளுக்குப் பாகனாக இருக்கும் ஒருவனைப் பற்றிய கதை இந்தப் படம். தன் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட ஒரு சைக்கிள் மீது அந்த இளைஞன் வைத்திருக்கும் அன்பு, காட்டும் அக்கறை படத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்குமாறு இயக்குநர் அமீர்தான் சிபாரிசு செய்தார். மிக அழகான ஸ்கிரிப்ட். சேரன், அமீர் படங்களில் வேலை பார்த்த திருப்தியும் அனுபவமும் எனக்கு அஸ்லம் மூலம் கிடைத்தது.

இன்றைக்கு என்னைப் பார்க்கும் அனைவரும் நான் ரொம்ப ஸ்லிம்மாக, பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் இருப்பதாகக் கூறிப் பாராட்டுகிறார்கள். நியாயமாக இதற்கு நான் இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். வயதுக்கு ஏற்ற வேடங்களைச் செய்வதுதான் வெற்றியைத் தரும் என்று அவர் எனக்குக் கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.

இந்தப் படத்தின் நாயகி ஜனனி, அவன் இவனில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர். இந்தப் படம் அவருக்கும் பெரிய பிரேக் கொடுக்கும்", என்றார்.

 

Post a Comment