டிவி தொகுப்பாளர் பாலாஜி ஹீரோவாகிறார்…. படத்தின் பெயர் சுட்ட கடை

|

Rj Vj Balaji Turns Hero

சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆனவர்கள் டிவியில் நடிக்க வருவது பழைய கதை. இப்போது டிவி தொகுப்பாளர்கள் ஹீரோவாகவோ, காமெடியானாகவோ அறிமுகமாவது புதியகதை.

சந்தானம், சிவகார்த்திகேயனை அடுத்து டிவி தொகுப்பாளர் பாலாஜி சுட்ட கதை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் 'சுட்ட கதை'. இதில் பாலாஜியுடன் வெங்கியும், கதாநாயகியாக லஷ்மிபிரியா நாயகியாக நடிக்கின்றனர். அவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

1985-ல் இருந்து 95-ம் வருடம் வரை காமிக்ஸ் நாவல்களில் பிரபலமான கதாபாத்திரங்களை வைத்தும், அதில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்தும் இந்தப் படத்தை எடுக்கப்போகின்றனராம். இது சுடாமல் சுட்ட கதை என்கிறார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சுபு. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழையாக இருக்கும். புது மாதிரியான பாணிக்கு காமெடியை கொண்டு சொல்லும் கொடைக்கானலில் நடப்பது போன்று திகில் காமெடி படமாக தயாராகிறது என்கிறார் சுபு.

இப்படத்திற்கு மேட்லிபுளூஸ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார்.

 

Post a Comment