ரஜினி டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலுக்காக பிற பஸ்களை புறக்கணித்த மக்கள்

|

When Passengers Flocked Rajini The Conductor

டெல்லி: ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்தபோது அவரது பேருந்தில் பயணம் செய்வதற்காக மக்கள் பிற பேருந்துகளில் ஏறமாட்டார்களாம்.

நமன் ராமச்சந்திரன் என்வர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்ததில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆனது வரையுள்ள சம்பவங்களை விவரமாகத் தெரிவித்துள்ளார். சினிமா வாழ்க்கை பற்றி மட்டுமல்லாமல் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி பார்போம்.

ரஜினி பெங்களூரில் கண்டக்டராக பணிபுரிந்தபோது அவர் ஸ்டைலாக டிக்கெட் கொடுப்பதும், பணத்தை வாங்கி சில்லறை கொடுப்பதும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதற்காகவே பயணிகள் பிற பேருந்துகள் காலியாகச் சென்றாலும் அதில் ஏறாமல் ரஜினி கண்டக்டராக இருந்த பேருந்தில் காத்திருந்து பயணம் செய்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment