சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் நடிகர்- இயக்குநர் கமல்ஹாசன்.
விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவை அறிவித்துள்ளன.
இதையடுத்து தமிழக அரசு 2 வார காலத்திற்கு இப்படத்தை திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து தற்போது நடிகர் கமல்ஹாசன் சட்டத்தின் உதவியை நாடியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என கூறியுள்ளார். மேலும் இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்துள்ளார்.
Post a Comment