சென்னை: நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு யாரேனும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. ஆரம்பம் முதல் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த இப்படம், தற்போது தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கலில் மாட்டி விட்டது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் குதிக்கலாம் என்ற எர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில் பாதுகாப்பு கோரியிருந்தார்.
இதையடுத்து இன்று முதல் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யாராவது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் உடனே கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வேனுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment