கங்கிராட்ஸ்... ஷகீராவுக்கு ஆம்பளைப் புள்ளை பிறந்திருக்காம்...!

|

Shakira Gives Birth A Boy

பார்சிலோனா: பிரபல பாடகி ஷகீராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பார்சிலோனாவில் உள்ள மருத்துவமனையில் தனது மகனை பிரசவித்துள்ளார் ஷகீரா. தாயும், சேயும் நலம் என மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது.

35 வயதாகும் ஷகீராவுக்கு பார்சிலானோ மருத்துவமனையில் நேற்று இரவு குழந்தை பிறந்தது. குழந்தை3 கிலோ எடையுடன் உள்ளதாம். முன்னதாக ஷகீராவுக்கு மாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது காதலரான பார்சிலோனா கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக், ஷகீராவை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தார்.

குழந்தைக்கு மிலன் பிக் மெபாரக் என்று பெயரிட்டுள்ளனர். மிலன் என்றால் அன்பு என்று அர்த்தமாம். சமஸ்கிருதப் பெயரும் கூட இது என்று கூறுகிறார்கள். அதாவது ஐக்கியம் என்ற பொருள் வருமாம்.

ஷகீராவுக்கு சுகப் பிரசவம் நடைபெறவில்லை. மாறாக அறுவைச் சிகிச்சைதான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Post a Comment