நல்ல நேரம், அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை 'ரதி' மரணம்!

|

Ill Health Kills Elephant Rathi

சென்னை: எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை ரதி மரணமடைந்தது.

கடந்த 1942-ம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் யானை குழியில் தவறி விழுந்த குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டது.

பின்னர் அந்த யானைக்கு ரதி என்று பெயர் சூட்டினர். அமரர் எம்.ஜி.ஆர். நடித்த நல்லநேரம், ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் மற்றும் கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட சினிமாப்படங்களிலும் நடித்துள்ளது.

தற்போது இந்த யானைக்கு 81 வயது. இந்த யானை மொத்தம் 13 குட்டிகளை ஈன்றது. இந்த ரதி யானைக்கு முதுமலையின் மூதாட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு.

இந்த யானைக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படுக்கையில் கிடந்த இந்த யானை சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை மரணமடைந்தது.

 

Post a Comment