மும்பை: பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வரவிருக்கிறார். போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வரவிருக்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெறவிருக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் உள்ள 100 சக்திவாய்ந்தவர்களின் பட்டியலை தனது அடுத்த இழதலில் வெளியிடுகிறது. அந்த இதழின் அட்டையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் போட்டோவைப் போட முடிவு செய்துள்ளது. இதற்காக பிரபல போட்டோகிராபர் டப்பு ரத்னானியிடம் ஷாருக்கானை போட்டோ எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
போர்ப்ஸ் இந்திய சந்தைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த 4 ஆண்டுகளில் அதன் அட்டைப் படத்தில் வரும் முதல் இந்திய நடிகர் ஷாருக் கான் தான் என்று அப்பத்திரிக்கைக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அந்த இழதலில் ஷாருக் தன்னுடைய வெற்றி, கிரிக்கெட் அணி, தயாரிப்பு நிறுவனம் குறித்து அளித்த பேட்டி வரவிருக்கிறது.
வாழ்த்துக்கள் ஷாருக்!!!
Post a Comment