அஜீத்-முருகதாஸ் படத்திற்கு பெயர் 'ரெட்டை தல'?

|

Rettai Thala Ajith

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு ரெட்டை தல என்று பெயர் வைக்கிறார்களாம்.

2001ம் ஆண்டு வெளிவந்த அஜீத் நடித்த தீனா படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள். அல்டிமேட் ஸ்டாரான அஜீத்துக்கு 'தல' என்ற பட்டப்பெயரை சூட்டிய முருகதாஸ் தனது படத்திற்கும் அதையே பெயராக வைக்கிறாராம்.

அவரது படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருவதால் 'ரெட்டை தல' என்று படத்திற்கு பெயர் வைக்கிறார் முருகதாஸ். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்துவிட்டும், அஜீத் சிவா படத்தை முடித்த பிறகும் ரெட்டை தல பட ஷூட்டிங் துவங்கும்.

இனிமேல் துவங்கவிருக்கிற படத்திற்கு பெயரை முடிவு செய்துவிட்டனர் ஆனால் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு இன்னும் ஒரு பெயரை வைத்தபாடில்லையே. சீக்கிரமா பெயரை சொல்லுங்கப்பா.

 

Post a Comment