கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது.
இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது.
திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது.
கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான்.
ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்).
+ comments + 2 comments
i support kamal
always terrarisms done by terrarists, but now a days terrarism is spreading to publics by some of the persons of head of public welfares(caste wise)
the publics are always calm but some persons are screwing them
ulagathil theevaravatham nadakkirathu athai padathil kaatiirukirargal ithai yealbaga yeduthukollamal mathavaathathai killapuvathu sariyalla
Post a Comment