அப்பா கமலுடன் இணைந்து நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாஸன்.
விரைவில் கமல்ஹாஸனுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் தொடங்கவிருக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாஸன் நடிக்கப் போகிறார் என்று சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
கமல்ஹாஸனும் அவர் மகள் ஸ்ருதி ஹாஸனும் பல முறை, இருவரும் சேர்ந்து நடிக்க விருப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அடுத்து உருவாகும் கமல் படத்தில் ஸ்ருதி நடிப்பார் என்று யூகங்கள் கிளம்பின.
இதற்கு விளக்கம் அளித்த ஸ்ருதி, "இப்போதைக்கு அப்பாவுடன் சேர்ந்து படம் பண்ணும் திட்டம் இல்லை. ஆனால் அப்படியொரு எண்ணம் உள்ளது. நடக்கும்போது நானே சொல்வேன்," என்றார்.
ஸ்ருதி ஹாஸன் இப்போதைக்கு தெலுங்கில் யாதவா, பாலுபு ஆகிய இரு படங்களிலும், இந்தியில் பிரபு தேவா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
விஸ்வரூபத்துக்குப் பின், தமிழில் ஒரு படம், ஆங்கிலத்தில் ஒரு படமும் இயக்கி நடிக்கிறார் கமல்.
Post a Comment