‘ஆக்ட்அபான் வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' என்ற மும்பையைச் சேர்ந்த பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
திரை இசை சக்ரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இப்படத்திற்காக 19 பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை இரு பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் உள்ளனர்.
‘மனிதனாக இரு - பாகம் 1'இன் இசை வெளியீடு சமீபத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. முதல் பாகத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ‘பாசம்' படத்தில் ‘உலகம் பிறந்தது எனக்காக' என்ற சூப்பர் ஹிட் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம்.எஸ். பாடினார். அதே பாடலின் வரிகளை ஆங்கிலத்தில் ‘மனிதனாக இரு - பாகம் 1' இல் எம்.எஸ்.வி. இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.
‘மனிதனாக இரு - பாகம் 1' இம்மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து ‘மனிதனாக இரு - பாகம் 2' தொடங்க இருக்கிறது. அதில் மீதமுள்ள 9 பாடல்கள் இடம்பெறுகின்றன.
இரண்டாவது பாகத்தில் நடிப்புத் திறமையையோ, பிற தொழில்நுட்ப திறமைகளையோ வெளிப்படுத்த விருப்பப்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஆக்ட்அபான் வென்சர்ஸ்' நிறுவனம் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி ‘மனிதனாக இரு - பாகம் 1' இன் ஆடியோ சி.டி. வாங்குபவர்கள் அதன் மேலட்டையையும், ஆடியோ சி.டி. வாங்கியதற்கான அத்தாட்சியையும் சமர்ப்பித்தால், திறமையின் அடிப்படையில் ‘மனிதனாக இரு - பாகம் 2'இல் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இப்பட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்!
அட தமாஷ் இல்லீங்க... சீரியஸாகவே இதை அறிவித்து, தங்கள் மெயில் ஐடியையும் வெளியிட்டுள்ளனர்... இமெயில் - incomes108@gmail.com.
Post a Comment