டெல்லி:டெல்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், தூத்துக்குடி, புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை காணும் போது வீட்டை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் காதல் அழகானது அதற்கான நேரம் இன்னும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறும் ஸ்ருதிஹாசன், தான் கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி, ஒரு பெண்ணாக இதைப்பற்றி பேச பயமாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே போக முடியுமா என்கிற கவலை இருக்கிறது என்றார். அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று நினைத்து அழுதேன் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.
Post a Comment