மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கில் எப்படியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த அசினுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
அசின் பாலிவுட் போன கதை உங்களுக்கு எல்லாம் தெரியும். கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர். முருகதாஸ். அப்போது தமிழ் கஜினியில் நடித்த அசினையே இந்தியிலும் போடலாமே என்று நாயகன் ஆமீர் கான் கூற முருகதாஸும் ஓகே சொன்னார். அப்படி பாலிவுட் சென்ற அவர் காதுகளுக்கு துப்பாக்கி படத்தை முருகதாஸ் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்யும் செய்தி வந்தது.
முருகதாஸின் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம், அக்ஷய் குமாருடனும் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம். அதனால் இந்த துப்பாக்கி ரீமேக்கில் நாயகியாகும் வாய்ப்பு நமக்கு தான் வரும் என்று அவர் ஓவராக எதிர்பார்த்துவிட்டார். ஆனால் அக்ஷய் குமாரோ சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கினால் நன்றாக இருக்குமே என்று கூற இயக்குனரும் அவ்வாறே செய்துவிட்டார்.
இதையடுத்து புத்தாண்டில் துப்பாக்கி ரீமேக் ஷூட்டிங் துவங்கிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்பார்ப்புடன் இருந்த அசினுக்குத் தான் ஏமாற்றமாகிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து ஏற்கனவே ஜோக்கர், ரவுடி ரத்தோர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது அவர்கள் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
Post a Comment