ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சிக்கு நடுவராகிறார் நமீதா!

|

Junior Super Dancer New Reality Show

நமீதா பீல்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீடியாவில் செய்தியாக வலம் வருவார். மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் மச்சான் என்று கூறி அவர் மார்க் போடும் அழகே தனிதான். இப்போது புதிதாக சூப்பர் டான்சர் நிகழ்ச்சியின் நடுவராக களம் இறங்கியுள்ளார்.

ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சி பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்சியை மானாட மயிலாட இயக்கும் கலா மாஸ்டர் இயக்குகிறார்.

பிரம்மாண்டமான மேடையில் 8 வயது முதல் 13 வயது வரை உடைய குட்டிச் சுட்டிகள் நடனமாடுகின்றனர். பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இந்த நிகழ்ச்சி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ

பாட்டு, நடனம் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பும் சேனல்களின் வரிசையில் தற்போது பாலிமர் டிவியும் இணைந்துள்ளது.

குட்டீஸ்களின் நடன நிகழ்ச்சி

சின்னக்குழந்தைகள் பேசுவது அழகு... அவர்கள் பாடவும், ஆடவும் செய்வது அதைவிட அழகு. இந்த நிகழ்ச்சிகளுக்கு என்றைக்குமே தனி வரவேற்பு உண்டு. இதனைக் கருத்தில் கொண்டுதான் பாலிமர் டிவியில் ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளனர்.

இதுவும் கலா மாஸ்டர்தான்

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட, குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியை இயக்கிய கலா மாஸ்டர் பாலிமர் டிவியில் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார்.

புதிய தொகுப்பாளர்கள்

அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயும், டான்ஸ் மாஸ்டர் பாபியும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகின்றனர்

நடுவராக நமீதா

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளர்களை மாச்சான் என்று கூறி பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டு மார்க் போட்ட நமீதா இதில் நடுவராக களம் இறங்கியுள்ளார். அவருடன் நடன இயக்குநர்கள் அசோக், பிரசன்னா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர்.

52 குட்டீஸ்கள் அமர்களம்

இந்த நடன நிகழ்ச்சியில் 8 முதல் 13 வயது வரை உள்ள 52 குட்டீஸ்கள் நடனமாட உள்ளனர். ஞாயிறுதோறும் காலை 10 மணிமுதல் 11 மணி வரை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது ஜூனியர் சூப்பர் டான்சர் நிகழ்ச்சி.

 

Post a Comment