சென்னை: ஸ்ரீராகவேந்திர சுவாமியின் பிறந்த நாளையொட்டி, 100 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் அமைத்துள்ளார் நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ்.
ரஜினியின் ரசிகரான நடிகர் லாரன்ஸ், ரஜினியைப் போலவே தீவிரமான ராகவேந்திரர் பக்தர். ரஜினியிடம் ஆலோசனைப் பெற்று அம்பத்தூரில் ராகவேந்தருக்கு கோவில் கட்டி உள்ளார். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
நாளை (19-ந்தேதி) இக்கோவில் கட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்றைய தினம் ராகவேந்தரின் பிறந்த தினமும் வருகிறது. இதையொட்டி ராகவேந்தர் கோவிலில் விசேஷ வழிபாட்டுக்கு லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
அத்துடன் புதிதாக கட்டியுள்ள இலவச பள்ளிக்கூடத்தையும் திறந்து வைக்கிறார். இந்த பள்ளியில் 100 மாணவர்கள் கல்வி கற்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து லாரன்ஸ் கூறும்போது, "கல்விக்கூடம் கட்டுவது புண்ணியம் தரக்கூடியது. ராகவேந்தர் பிறந்த நாளில் புதிதாக கட்டப்பட்ட பாடசாலை திறக்கப்படுகிறது," என்றார்.
Post a Comment