உதவி செய்பவர்களுக்கு இனிப்பு அதிர்ச்சி கொடுக்கும் விஜய்

|

Vijay S Cakeful Grateful Act

சென்னை: இளைய தளபதி விஜய் நன்றி மறக்காதவர். அவர் தனக்கு உதவியவர்களுக்கு இனிப்பு அதிர்ச்சி கொடுக்கிறாராம்.

இளைய தளபதி விஜய் தனக்கு உதவி செய்பவர்களை ஒரு நாளும் மறப்பதில்லை. தனக்கு உதவி செய்பவர்களுக்கு அவர் இன்ப இனிப்பு அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

யாராவது உதவி செய்தால் நன்றி என்று சொல்வோம். விஜய் நன்றியோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக கிலோ கணக்கில் கேக் அனுப்பி உதவிக்கு வித்தியாசமாக நன்றி சொல்கிறார். விஜய் நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் கிராமத்து கெட்டப்பில் வரவிருக்கிறார்.

இந்த படம் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜயுடன் மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் பயங்கர டச்சிங்காக இருக்குமாம்.

 

Post a Comment