பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 நிகழ்ச்சி வரும் மார்ச் 11ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்பது எல்லோருக்கும் கனவுதான். அந்த கனவை நனவாக்கவே கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை அமிதாப்பச்சனை வைத்து தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கியது. ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்ற அந்த நிகழ்ச்சி முடிவடைந்து இப்போது இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது.
இந்த சீசனை பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்குகிறார். நீங்களும் வெல்லலாம் சீசன் 2 மார்ச் 11ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை ஒளிபரப்பாகும்.
அது என்ன 4321?
இந்த நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 4321 என்று விளம்பரம் செய்தது விஜய் டிவி நான்கு ஆப்சன்கள், 3 லைப் லைன், 2 பேர் 1 கோடி என்பதுதான் அது.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களை தேர்ந்தெடுக்க விஜய்டிவியில் கேள்விகள் கேட்கப்பட்டன. சரியான பதிலளித்தவர்களை வைத்து கோவை, திருச்சி, சென்னையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு பெறுபவர்கள் பிரகாஷ் ராஜ் உடன் பங்கேற்று அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடைகளைக் கூறி ஒரு கோடி ரூபாய் வெல்வார்கள்.
Post a Comment