ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு... 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!

|

Studio Green Keeps 7 Films Pipeline

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு முதல் நிலை தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது ஸ்டுடியோ கிரீன்.

தமிழ் சினிமா மார்கண்டேயன் எனப்படும் சிவக்குமாரின் உறவினர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமானது இந்த ஸ்டுடியோ க்ரீன்.

பருத்திவீரன், சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களை ஆரம்பத்தில் தயாரித்தது.

தொடர்ந்து சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்த படங்களை மட்டும் தயாரித்து வந்த இந்த நிறுவனம் இப்போது வெளிப்படங்களையும் வாங்கி வெளியிட ஆரம்பித்துள்ளது. அவை பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்துவிடுகின்றன.

அட்டகத்தி, பீட்சா ஆகிய படங்களைத் தொடர்ந்து திருகுமரன் எண்டர்டைன்மண்டஸ் நிறுவனம் தயாரித்துள்ள சூது கவ்வும் என்ற படத்தையும் மொத்தமாக ஸ்டுடியோ க்ரீன்தான் வாங்கியுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்க, 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நகுலன் குமாரசாமி இப்படத்தினை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களின் உரிமையை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியுள்ளது.

சிங்கம் 2, பிரியாணி, அழகுராஜா ஆல் இன் ஆல், 'அட்டகத்தி' ரஞ்சித்தின் அடுத்த படம் போன்றவற்றை தயாரித்து வருகிறது ஸ்டுடியோ க்ரீன்.

 

Post a Comment