மணிரத்னம் இயக்கும் இந்திப் படம்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கதை…

|

Mani Ratnam S Next Hindi Film On India Pakistan Partiti

மும்பை: கடல் படம் ஒரு வழியாக அலையின் சத்தம் கூட இல்லாமல் போய்விட்டது. நஷ்டப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டாலும் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய மணிரத்னம் அடுத்த படியாக சத்தமில்லாமல் இந்தி படம் எடுக்க கிளம்பிவிட்டார்.

இந்த படத்தின் கதை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

மணிரத்னம் இயக்க உள்ள இந்திப் படத்திற்கு ரென்சில் டிசில்வா திரைக்கதை எழுதுகிறாராம். இவர் குர்பான் படத்தை இயக்கியுள்ளார்.

18 ஆண்டு கால விளம்பரப் பட இயக்குநர் என்ற பெரிய அந்தஸ்து கொண்ட டிசில்வா, ஏற்கனவே அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் சரியாக போகாவிட்டாலும் மணிரத்னத்துடன் மீண்டும் இணைகிறார் டிசில்வா.

இந்தப் படத்தில் இளைய தலைமுறை நடிகர்களை நடிக்கவைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Post a Comment