சென்னை: தலைவா படத்தில் விஜய்க்கு வில்லனாக நான் நடிப்பதாக வந்த அத்தனை செய்திகளும் அக்மார்க் கப்சா, என்கிறார் பாடகர் விஜய்.
பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். தமிழ் - மலையாளத்தில் இவரும் முன்னணி பாடகராக உள்ளார். கடந்த வாரம் சிறந்த பாடகருக்கான கேரள அரசின் விருதினை பெற்றுள்ளார்.
ஏஎல் விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் வில்லனாக விஜய் யேசுதாஸ் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வருகின்றன.
விஜய் - விஜய் - விஜய் காம்பினேஷன் என்பது செய்திக்கு ரைமிங்காக இருக்கும் என்பதால் இந்த செய்தியை பலரும் நம்பவே ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் சில தினங்களுக்கு முன் இதுகுறித்து இயக்குநர் விஜய்யிடம் கேட்டபோது, யார் இப்படியெல்லாம் செய்தியைக் கிளப்பிவிடுகிறார்கள் என்றார்.
இப்போது விஜய் யேசுதாஸே இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது சமீபத்திய ட்வீட்டில், "நிறைய பேர் என்னிடம் கேட்டு, நிறைய முறை விளக்கமும் சொன்ன விஷயத்தை திரும்பத் திரும்ப எழுதி வருவது கடுப்பைக் கிளப்புகிறது. நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஏதாவது சுவாரஸ்யமான வாய்ப்பு வந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment