சவீதா என்ற பெண் ஓட்டிய டாக்ஸியில் சவாரி போய் படு குஷியாக காணப்படுகிறாராம் நடிகை ஸ்ரீதேவி. அவரது வாயைத் திறந்தாலே இப்போது சவீதா புராணம்தான். அப்படி ஒரு பாராட்டு.
செல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி அது. அதில் கலந்து கொண்ட விஐபிக்களை பெண் டிரைவர்களைக் கொண்ட கார்களில் அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீதேவியையும் அப்படி ஒரு காரில் அழைத்துச் சென்றனர். சகா கேப்ஸ் நிறுவனத்தின் டாக்ஸியில் ஸ்ரீதேவி பயணித்தார். இந்தக் காரை ஓட்டிச் சென்றவர் பெயர் சவீதா.
காரில் பயணித்த ஸ்ரீதேவி பின்னர் காரிலிருந்து இறங்கியதும் சவீதாவைப் பாராட்டித் தள்ளி விட்டார்.
இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், மிகவும் அருமையான ஐடியா இது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் பெண் இயக்குநரிடம் பணியாற்றியபோது கிடைத்த அனுபவமே இப்போது சவீதாவுடன்காரில் பயணித்தபோதும் கிடைத்தது.
ரொம்ப திரில்லாக இருந்தது. எனது காரை ஓட்டி வந்தவர் சவீதா. ரொம்ப நல்ல பெண் என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது காலம் மாறி விட்டது. பெண்களுக்கு மேலும் மேலும் ஊக்கம் தர வேண்டும், அதிகாரம் தர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றார் ஸ்ரீதேவி.
Post a Comment