ஃபிரிமாண்ட்(யு.எஸ்) : அமெரிக்காவில் முதன் முறையாக சூர்யாவின் சிங்கம் 2 ஐம்பதாவது நாளை கொண்டாடியது.
தமிழகத்தில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஜூலை 4ம் தேதி அமெரிக்கா முழுவதும் சிங்கம் 2 வெளியானது.
தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலியில் மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அவற்றும் ஃப்ரிமாண்ட் பிக் சினிமாஸ் திரையரங்கத்தில் தொடர்ச்சியாக ஐம்பது நாள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் ரஜினி - கமல் படங்கள் மட்டுமே இதுவரை ஐம்பது நாட்களை கடந்து வெற்றியடைந்துள்ளன. மற்ற படங்கள் மூன்று வாரங்களைக் கடந்தாலே பெரிய விஷயமாகும். ரஜினி - கமலுக்கு அடுத்து, அஜீத் மற்றும் சூர்யாவுக்கு அமெரிக்கா முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களுக்குப் பிறகுதான் மற நடிகர்கள். தமிழகத்தில் சுமாராக ஓடிய ஏழாம் அறிவு, மாற்றான் படங்கள் கூட அமெரிக்காவில் வெற்றிகரமாக ஓடின.
இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு சிங்கம் 2, அமெரிக்க தமிழ் சிநிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சூர்யாவின் இறால் மீசையை போல் மீசை வளர்த்த ரசிகர்களும் அமெரிக்காவில் உண்டு.
திரைப்படம் தாண்டி, பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தது, அகரம் ஃபவுண்டேஷன் மூலம் உதவி உள்ளிட்டவைகளால் சூர்யா மீது அமெரிக்கத் தமிழர்களிடையே பெரிய நல்லெண்ணம் உருவாகி உள்ளது.
எந்த திரைப்படமும் அமெரிக்காவில் பெரும் வெற்றி அடைய வேண்டுமானால், குடும்பத்தோடு பார்க்க வரும் ரசிகர்களால் மட்டுமே சாத்தியமாகும். ரஜினி படங்களை மட்டுமே, எந்த தயக்கமும் இல்லாமல், முதல் நாள் காட்சியிலே குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள் அமெரிக்காவில். மற்ற நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
ஐம்பதாவது நாள், 175 வது காட்சியுடன் சிலிக்கான் வேலியிலிருந்து விடைபெற்றுள்ளது சிங்கம் 2. எந்தெந்த தியேட்டர்களில், எத்தனை காட்சிகள் விவரங்கள் அனைத்தையும் சூர்யா ரசிகன் இணையத்தளத்தில் விவரமாக வெளியிட்டுள்ளார்கள்.
Post a Comment