துவங்கிய கையோடு பரண் மேல் போடப்பட்ட ஆமீர், சல்மான் கானின் 3டி அவதார் படம்

|

துவங்கிய கையோடு பரண் மேல் போடப்பட்ட ஆமீர், சல்மான் கானின் 3டி அவதார் படம்

மும்பை: ஆமீர் கான், சல்மான் கான் இணைந்து நடித்த படத்தை 3டியில் எடுக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த படத்தின் வேலைகளை தற்போது நிறுத்துவிட்டனர்.

1994ம் ஆண்டு வெளியான காமெடி படம் அந்தாஸ் அப்னா அப்னா என்னும் இந்தி படம். ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இப்படத்தில் ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை தற்போது 3டி அனிமேஷன் படமாக எடுக்க முடிவு செய்தனர்.

படத்தை சித்தார்த் ஜெயின் தயாரிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

அனிமேஷனுக்கு இந்தியாவில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது இல்லை. இந்த நிலை மாறினால் நான் மீண்டும் படத்தை எடுப்பேன் என்றார்.

ரூ.15 கோடி செலவில் எடுப்பதாக இருந்த படத்தின் வேலைகள் 35 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால் மவுசு இல்லாமை மற்றும் பணப் பிரச்சனையால் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment