ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

|

மும்பை டானைப் பிடிக்கும் போலீசாக நடித்த வேளையோ என்னமோ... நடிகை அமலா பால் பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். அதுவும் இந்திப் பட உலகில் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில்!

தமிழில் விஜயகாந்த் நடிக்க, முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு கப்பார் என தலைப்பு கூட சூட்டிவிட்டனர்.

வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் கப்பாரில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாஸன் அல்லது இலியானா நடிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இப்போது இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமலா பாலை ஓகே செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.

இந்தப் படத்தின் நாயகி தென்னிந்திய முக சாயல் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும், ஸ்ருதி, இலியானாவை விட அமலா பால்தான் அந்த வகையில் பொருத்தமாக இருப்பார் என்றும் தயாரிப்பாளர் கருதியதால், அமலாவை அறிமுகப்படுத்துகிறார்களாம்!

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட் மற்றும் டிஸ்கஷன்களுக்காக இப்போது அடிக்கடி மும்பை பறந்து கொண்டிருக்கிறார் அமலா.

 

Post a Comment