தங்க மீன்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் 'தரமணி'!

|

கற்றது தமிழ், தங்க மீன்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம் உருவாக்கும் புதிய படத்துக்கு தரமணி என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்தப் படத்தை ஜேஎஸ்கே பிலிம்ஸஸ் தயாரிக்கிறது.

தங்க மீன்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் 'தரமணி'!

ராம் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘தங்க மீன்கள்' நேற்று வெளியானது. அதே நாளில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் ராம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய படத்துக்கு ‘தரமணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

'சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் காதல்' என்ற வாக்கியத்துடன் இப்படம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. தரமணி என்பது ஐடி நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் குறியீடாகிவிட்டதால், இந்தக் கதைக் களம் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

கற்றது தமிழ் மாதிரி, இளையோரின் சமூக அவலங்கள் குறித்த ராமின் அழுத்தமான பார்வை நிச்சயம் இடம்பெரும் என நம்பலாம்!

 

Post a Comment