இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்.சில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்: கமல்

ஹைதராபாத்: விஸ்வரூபம் 2 படத்தை இந்தியாவில் வெளியிட எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படமே டிடிஹெச்சில் வெளியிடுவதாக இருந்தது. அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் கமல் விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய கமல் கூறுகையில்,

இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்.சில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்: கமல்

படங்களை டிடிஹெச் மூலம் டிவிகளில் வெளியிடுவது அதை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஆகும். டிவியில் ஒளிபரப்புகையில் உரிய கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் படத்தை டிவியில் மட்டுமே பார்க்க முடியும் என்று இல்லை. தியேட்டர்களிலும் படம் ரிலீஸ் செய்யப்படும். இருப்பினும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அனைத்து வீடுகளிலும் சமையல் அறைகள் உள்ளது. இருப்பினும் எதற்காக ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காவிட்டால் அமெரிக்காவில் ஒளிபரப்புவேன் என்றார்.

 

நல்ல படங்களை ஆதரியுங்கள், ஆபாசப் படங்களைப் புறக்கணியுங்கள்: வி.எஸ்.ராகவன் வேண்டுகோள்

ஈரோடு: நல்ல படங்களை ஆதரிக்குமாறும், ஆபாசப் படங்களைப் புறக்கணிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவன்.

நேற்று, ஈரோட்டில் கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது, வி.எஸ். ராகவன் தெரிவித்ததாவது...

நல்ல படங்களை ஆதரியுங்கள், ஆபாசப் படங்களைப் புறக்கணியுங்கள்: வி.எஸ்.ராகவன் வேண்டுகோள்

அறிமுகம்....

1954-ஆம் ஆண்டு வெளிவந்த "வைரமாலை' என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக நான் அறிமுகம் ஆனேன்.

அப்பா கேரக்டர்....

முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன்.

ஆரோக்கிய சினிமா....

என்னைப் பொருத்த வரை சினிமா என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசமாக இருக்கக் கூடாது.

ஆதரவும் புறக்கணிப்பும்....

நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆபாசப் படங்களை மக்கள் புறக்கணித்தால் மீண்டும் ஆபாசப் படங்களை தயாரிக்க அஞ்சுவார்கள்.

திருப்தியான படங்கள்...

நான் நடித்ததிலேயே, சவாலே சமாளி, வாழையடி வாழை ஆகிய படங்கள் எனக்கு திருப்தி தந்த படங்களாக அமைந்தன.

நாகேஷால் வந்த நகைச்சுவை...

திரையுலகில் நாகேஷுடன் பழகிய பிறகுதான் நகைச்சுவையாகப் பேசுவதைக் கற்று கொண்டேன்.

சாகும் வரை நடிக்க ஆசை...

எனக்கு இப்போது 89 வயதாகி விட்டது. சாகும் வரையிலும் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்தார்.

 

டிடிகே பிரஸ்டீஜின் புதிய பிராண்ட் அம்பாசிடரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்

சென்னை: சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பாளரான டிடிகே பிரஸ்டீஜ் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராயை தங்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது.

பிரசவத்திற்கு பிறகு படங்களில் நடிக்காத ஐஸ்வர்யா ராய் விளம்பர படங்களில் நடிப்பது, கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வது என்று பிசியாகத் தான் இருக்கிறார்.

டிடிகே பிரஸ்டீஜின் புதிய பிராண்ட் அம்பாசிடரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும், இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோரை டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனம் தங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரூ.2,500 கோடி மதிப்புள்ள டிடிகே குழுமத்தின் ஒரு பகுதி தான் சமையல் அறை சாதனங்கள் தயாரிப்பாளரான டிடிகே பிரஸ்டீஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: ஆர்யா, நயன்தாரா, ஜெய், சந்தானம், நஸ்ரியா

இசை: ஜிவி பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ஏஆர் முருகதாஸ்

இயக்கம்: அட்லீ


ஒவ்வொரு ஜோடியின் காதலுக்கும் அவர்களின் பிரிதலுக்கும் காரணம் என்று தேடினால் சில பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். அது

ஒரு காதல் தோல்விக்குப் பின் வரும் அழுத்தமான காதல்தான் இந்த ராஜா ராணியின் கதை.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

ஆர்யாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள், பெற்றோர் விருப்பத்தின்படி. ஆனால் இருவருக்கும் ஏற்கெனவே வெவ்வேறு காதல் பின்னணி இருக்கிறது. அந்தக் காதல்களிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிப்பவர்கள், வேறு வழியின்றி நிரந்தரமாகப் பிரிய முடிவெடுக்கிறார்கள். பிரிந்தார்களா.. என்பது, கொஞ்சம் இழுவையான க்ளைமாக்ஸ் (அரை மணி நேரம் பாஸ்!).

மவுன ராகத்தின் சாயல், குறிப்பாக ஜெய்யின் பாத்திரப் படைப்பு, இருந்தாலும், திரைக்கதையை ஜோடித்த விதத்தில் மனதில் இடம்பிடிக்கிறது ராஜா ராணி.

குறிப்பாக சந்தானம் படத்தின் ப்ளஸ்களில் முக்கியமானவர்!

படத்தில் இரு காதல் ஜோடிகள். ஆர்யா - நஸ்ரியா, ஜெய் - நயன்தாரா. இரு ஜோடிகளுமே காதல் காட்சிகளில் மகா இயல்பாய், அனுபவித்து நடித்திருக்கிறார்கள்.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

ஜெய்யின் பாத்திரம் எப்படிப்பார்த்தாலும் மவுன ராகம் கார்த்திக்கை நினைவுபடுத்துவதை மறுப்பதற்கில்லை. இத்தனைக்கும் இரு பாத்திரங்களின் அடிப்படைத் தன்மையிலும் வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன.

வயது முப்பதைத் தாண்டினாலும், நயன்தாராவை ஏன் இன்னும் இளம் நடிகர்கள் துரத்துகிறார்கள் என்பதற்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது (ஆனாலும் அநியாயத்துக்கு ஓவர் மேக்கப்!)

நஸ்ரியாவின் இளமையிலும் அழகிலும் சலனப்படாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அதனாலேயே அவர் நடிப்பில் கோட்டை விட்டாலும் 'கண்டுக்காதபா... கண்ணுக்குக் குளிர்ச்சியா பாத்துட்டு வா' என்கிறது ரசிக மனசு!

சத்யராஜுக்கு இன்னொரு ஜென்டில்மேன் அப்பா வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார்.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

சத்யன் கிச்சு கிச்சு மூட்ட முயன்று தோற்றாலும், சந்தானம் அவருக்கும் சேர்த்து சிரிக்க வைத்துவிடுகிறார். குறிப்பாக இயல்பாய் வந்து விழும் அந்த காமெடி பஞ்ச்கள்!

க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அந்த முடிவு என்ன என்பது நமக்கே தெரிந்து போகிறது. தமிழ் சினிமாவில் கசந்த மனங்கள் மீண்டும் சேருமிடம் ஒன்று ரயில் நிலையம் அல்லது விமான நிலையம்!

தொழில்நுட்ப ரீதியாக படம் முதல் தரம். ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தை ஜொலிக்க வைக்கிறது. ரொமான்ஸுக்கு புது நிறம் தந்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையில் நிறைய பழைய படங்களின் சாயல்.

ராஜா ராணி- சிறப்பு விமர்சனம்

பழக்கப்பட்ட சென்டிமென்ட் பாதையில் முதலில் பாதுகாப்பாக பயணிப்போம் என்று இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருப்பார் போலிருக்கிறது அட்லீ. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீளும் படத்தின் காட்சிகளை இன்னும் கூடக் குறைத்திருந்தால் படத்தின் மைனஸ்கள் தெரிந்திருக்காது.

ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில், பார்வையாளர்களை அலுப்பின்றி வைத்திருக்கும் வித்தை முதல் படத்திலேயே கைவந்திருக்கிறது அட்லிக்கு.

ரசிக்கத்தக்க ராஜா ராணிதான்!

 

கோபத்தில் காஸ்ட்லி போனை போட்டுடைத்த விஷால்...

கோபத்தில் காஸ்ட்லி போனை போட்டுடைத்த விஷால்...

விஷால்: சமீபகாலமாக மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறாராம் விஷால். மதகஜ ராஜா படப் பிரச்சினையே விஷாலின் மன அழுத்தத்திற்கு பிண்ணனியில் உள்ளதாம்.

இந்நிலையில், சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் ‘பாண்டிய நாடு' படத்தின் ஷூட்டிக்கின் போது, கோபத்தில் தனது காஸ்ட்லியான செல்போனைத் தூக்கி கீழே போட்டு உடைத்து விட்டாராம் விஷால்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, திடீரென மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் அற்புதமான நடிகரான விஷால் இவ்வாறு கோபமாக செல்போனை கீழே போட்டு உடைத்து ஆவேசமானதைப் பார்த்து யூனிட்டில் உள்ளவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

 

ரசிகர்கள் என்னை மறந்து விடுவார்களோ... குழப்பத்தில் நடிகை

வாட்டசாட்டமான் சிங்கத்தின் ஜோடியான அந்த யோகா டீச்சருக்கு கைவசம் மூன்றே படங்கள் தான் உள்ளன. அதில் இரண்டு சுந்தரத் தெலுங்கு, மற்றொன்று மற்றொரு உலகப் படம்.

இது தவிர தற்போதைக்கு வேறு படங்களில் அம்மணி ஒப்பந்தமாகவில்லையாம். தமிழ்ப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்ற போதும், தெலுங்குப் படங்கள் ரிலீசாக வருடக் கணக்கில் ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் ரசிகர்கள் தன்னை மறந்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளூர இருக்கிறதாம் அம்மணிக்கு.

ஆனபோதும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத நடிகை, புதிய படங்கள் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், ‘விரைவில் திருமணம் செய்து கொள்ளலாமா என்ற யோசனையில் இருக்கிறேன்' என மழுப்பலாகக் கூறுகிறாராம்.

புதிய திறமைசாலிகளின் வரவால், படவாய்ப்பு இல்லாததைக் கூட எவ்வளவு பாலிசாக நடிகை கூறுகிறார் என சிரித்துக் கொள்கிறார்களாம் திரையுலக நண்பர்கள்.

 

சாண்டலுக்கு இணையாக வளர்ந்து வரும் காமெடியன்...

சென்னை: முன்பெல்லாம் சாண்டல் காமெடி நடிக்க முடியாத, நாட்கள் இல்லாத படங்கள் தான் சுந்தர படத்தில் நடித்த அந்த இரண்டெழுத்து நடிகருக்கு கை மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.

தொடர்ச்சியாக நடிகர் நடித்த படங்களில் காமெடி காட்சிகள் பேசப்படுவதால், இயக்குநர்களின் பார்வை இப்போது அந்த இரண்டெழுத்து நடிகர் பக்கம் திரும்பியுள்ளதாம். மனிதர் செட்டில் இருந்தால் ஷூட்டிங்கே கலகலப்பாக மாறி விடுவதாக படக் குழுவினர் புகழுகிறார்களாம்.

சாண்டலுக்கு இணையாக கதாநாயகியோடு டூயட் பாடும் அளவிற்கு, பரோட்டா நடிகரும் கேரக்டர் வித் காமெடி ரோல்களில் வளர்ந்து வருவதால் பல காமெடியர்களின் காதில் புகை வருகிறதாம்.

 

தெலுங்கிலும் பாடும் கார்த்தி!

தெலுங்கிலும் பாடும் கார்த்தி!

ஒரு காலத்தில் பாடத் தெரிந்தால்தான் நடிக்கவே வாய்ப்பு என்ற நிலை இருந்தது.

பின்னர் ஒழுங்காகப் பேசத் தெரியாவிட்டாலும் கூட வாய்ப்பு தந்தார்கள்.

இப்போது மீண்டும் இளம் நடிகர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாட விரும்புகிறார்கள்.

அந்த வகையில் கார்த்தியும் தொடர்ந்து பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் பிரியாணி படத்தில் முதல் முறையாகப் பாடிய கார்த்தி, தொடர்ந்து தெலுங்கிலும் அதே படத்துக்காக பாடியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இது அவரது 100வது படம். கார்த்திக்கு ஜோடியாக முதன்முறையாக ஹன்சிகா நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்துக்காக கார்த்தி தமிழில் ஒரு பாடலை பாடியிருந்தார். இப்போது அதே பாடலை தெலுங்கிலும் கார்த்தியை வைத்தே பாட வைத்துள்ளார்

 

55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான் - கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்!!

55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான் - கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்!!

சென்னை: 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மான்.

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கல்பட்டு பெண்

வஹீதா ரஹ்மான் ஒரு தமிழ் முஸ்லிம் பெண்மணி என்பது பலருக்குத் தெரியாது. செங்கல்பட்டில் பிறந்த இவரது தாய் மொழி தமிழ். மதம் சார்ந்த முறையில் உருது, இந்தியைக் கற்றுக் கொண்டவர். பின்னர் ஹைதராபாத் போய், குருதத் பார்வையில் பட்டு ஹிந்தியில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றவர்.

தமிழில்..

இந்தியில் கொடிகட்டிப் பறந்தாலும், வஹீதா ரஹ்மான் முதலில் நடித்தது இரு தமிழ்ப் படங்களில்தான். ஒன்று எம்ஜிஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்.

அடுத்து ஜெமினி கணேசன் நடித்த காலம் மாறிப்போச்சு. இரண்டுமே சூப்பர் ஹிட். இவர் அந்தப் படங்களில் நாயகி இல்லை என்றாலும், ராசியான நடிகை என்ற பெயர் கிடைக்க, தொடர்ந்து நான்கு தமிழ்ப் படங்களில் நடித்தார்.

ஹிந்தியில்...

பின்னர் இந்தியில் சிஐடி படத்தில் தன் கேரியரைத் தொடங்கினார். ஏராளமான வெற்றிப் பங்களில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த வஹீதா, கணவர் இறந்த பிறகு 2002-லிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

55 ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வஹீதா ரஹ்மான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படம் விஸ்வரூபம் 2.

கமலுக்கு அம்மாவாக...

இந்தப் படத்தில் கமல்ஹாஸனுக்கு அம்மாவாக நடிக்கிறாராம் வஹீதா. இந்தியிலும் விஸ்வரூபம் 2 வெளியாகிறது. வஹீதா ரஹ்மான் நடிப்பது இந்தி ஏரியாக்களில் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பை உருவாக்கும் என்பதால் வஹீதாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்.

 

புடாபெஸ்ட் பறந்த செல்வராகவன் - அனிருத்

புடாபெஸ்ட் பறந்த செல்வராகவன் - அனிருத்

இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகருக்குப் பறந்துள்ளனர் இயக்குநர் செல்வராகவனும் இசையமைப்பாளர் அனிருத்தும்.

இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், படத்துக்குப் பின்னணி இசையமைக்க முடியாமல் ஒதுங்கிவிட்டார்.

வேறு படங்களில் பிஸியாகிவிட்டதால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக விளக்கமும் சொல்லிவிட்டார்.

முதலில் ஒப்புக் கொண்ட படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களுக்கு எப்படி முக்கியத்துவம் தரலாம் என அவரை நோக்கி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன், தனது புது கூட்டாளியான இசையமைப்பாளர் அனிருத்தை அழைத்துக் கொண்டு, ஹங்கேரி நாட்டுத் தலைநகரான புடாபெஸ்டுக்குப் பறந்திருக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசையை இங்கு வைத்துதான் உருவாக்கப் போகிறார்களாம். பத்து நாட்கள் புடாபெஸ்டில் தங்கியிருந்து இசையமைப்புப் பணியை முடித்துக் கொண்டு வருகிறோம் என செல்வராகவன் அறிவித்துள்ளார்.

அப்படியெனில் படம் தீபாவளிக்கு கன்பர்ம்தானா!

 

மீண்டும் சேரும் ராஜா ராணி கூட்டணி!

மீண்டும் சேரும் ராஜா ராணி கூட்டணி!

ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் படத்தை இயக்கிய அட்லியை வைத்து மீண்டும் படம் தயாரிக்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

ராஜா ராணி குறித்து பாஸிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. கிராமம் சார்ந்த திரையரங்குகளில் பெரிய வரவேற்பில்லாவிட்டாலும், மல்டிப்ளெக்ஸ் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது.

திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படத்தை தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்திற்கும் ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் சத்யராஜ் மட்டும் நிச்சயம் இருப்பார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அட்லி.

 

பாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா

பாஜகவில் சேர்ந்தார் சீரியல் நடிகை மாளவிகா

பெங்களூர்: பிரபல நடிகை மாளவிகா கர்நாடக பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அண்ணி டிவி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா.

தமிழ் சினிமாவில் ஆறு, ஜெ.ஜெ ஆதி, ஜெயம்கொண்டான், டிஷ்யூம்' உட்பட, தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, கர்நாடகாவில், தேவகவுடாவின், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். கட்சியை வளர்க்க பாடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார் இந்த நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

செல்லமே

ராதிகாவின் செல்லமே தொடரில் நடித்தார் மாளவிகா. கன்னட திரையுலகிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

மோடியின் சுயசரிதை

பாஜகவில் இணைந்தது பற்றி கருத்து கூறியுள்ள மாணவிகா, நரேந்திர மோடியின் சுயசரிதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அவரது, வாழ்க்கை, மக்கள் நலச்சேவைகளின் செயல்பாடு எனக்கு பிடித்திருந்தன. அவர் எனக்கு முன்னுதாரணமாக தெரிந்தார். அவரது கருத்துக்கள் என்னை ஈர்த்தது. எனவே,பா.ஜ.,வில் இணைந்தேன்' என, தெரிவித்துள்ளார்.

மாளவிகாவின் கணவர்

மாளவிகாவின் கணவர் அவினாஷ் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.

பூஜா காந்தியை பின்பற்றி பாஜகாவில் சேர்ந்தீர்களா என்று மாளவிகாவிடம் கேட்டதற்கு. அரசியலில் நான் பூஜா காந்தியை பின்பற்ற வில்லை. என்னை அவரோடு ஒப்பிடவேண்டாம் என்று கூறியுள்ளார் மாளவிகா.

 

ராஜாவுக்காக தன் கொள்கையை மாற்றிக் கொண்ட ராணி...

பொதுவாக விளம்பர படங்களில் நடிப்பதில்லை, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வருபவர் இந்த நம்பர் நடிகை.

ஆனால், தற்போது அவரும், கடவுள் நடிகரும் இணைந்து நடித்த கிங் அண்ட் குயின் பட சம்பந்தமான விளம்பரங்களில் தலை காட்டுகிறாம் நடிகை. நடிகையின் இந்தத் திடீர் மன மாற்றத்தின் பிண்ணனியில் கடவுள் நடிகர் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கவே, நடிகை தற்போது அவருடைய படம் விளம்பரம் சம்பந்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் வருகிறாராம்.

 

பாதி கதை ஓகே... மீதி எங்கே? இயக்குநரிடம் கேள்வி கேட்ட நடிகர்

பொதுவாக பாதி கதையைச் சொல்லி கால்ஷீட் வாங்குவது தான் அந்த கேரள இயக்குநரின் வழக்கமாம். பின்னர் ஷூட்டிங் ஆரம்பித்தப் பிறகு கதையின் போக்கை தன் இஷ்டத்துக்கு மாற்றிக் கொள்வாராம் இந்த இயக்குநர். ஏற்கனவே, இவரது போலீஸ் மற்றும் மிலிட்டரி படத்தில் நடித்த லயன் நடிகர், இதனால் மிகவும் கன்பியூஸ் ஆனாராம்.

எனவே, இம்முறை முன்னெச்சரிக்கையாக முழுக் கதையையும் கூறுங்கள், பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என தடாலடியாக உத்தரவு போட்டு விட. நடிகரின் ரியல் அதிரடி ஆக்‌ஷனால் ஆடிப்போய் விட்டாராம் இயக்குனர்.

இதனால், படப்பிடிப்பு தாமதமாக வீட்டில் குதூகலமாக 3 மாதம் பொழுதைக் கழிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி விட்டாராம் நடிகர்.

 

ரஜினி அட்வைஸ்படி நடிக்கிறேன் - விக்ரம் பிரபு

ரஜினி அட்வைஸ்படி நடிக்கிறேன் - விக்ரம் பிரபு

சென்னை: ரஜினி சொன்ன அறிவுரையைக் கேட்டு, அதன்படி படங்களை ஒப்புக் கொள்கிறேன் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் பிரபு சாலமன்.

கும்கி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் பெற்ற வெற்றியால், முன்னணி இளம் நாயகனாக வலம் வருகிறார்.

இப்போது இவன் வேறு மாதிரி, சிகரம் தொடு உள்பட 3 படங்கலில் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "ஒரே நேரத்துல நாலைந்து படங்களில் நடிப்பது என் தாத்தா, அப்பா காலத்துல சகஜம், சுலபம். இன்னைக்கு நிச்சயம் கஷ்டம். ஆனா, 'ஒரே நேரத்துல ஒரு படம் மட்டும் பண்ணாதே... ரெண்டு, மூணு படங்கள்ல நடி. அப்பத்தான் நல்ல அனுபவம் கிடைக்கும்'னு ரஜினி சார் சொன்ன அறிவுரையை ஏற்று நான் அப்படி நடிக்க ஒப்புக்கிறேன்," என்றார்.

 

சிம்பு- ஹன்சிகா... நடக்குமா... நடக்காதா?- அட பெட் கட்றாங்கப்பா!!

சிம்பு - ஹன்சிகா திருமணம் நடக்குமா நடக்காதா என பெட் கட்டும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

இந்த இருவரின் காதலும் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே கிட்டத்தட்ட இதுதான் நிலைமை.

இப்போது ஹன்சிகாவின் அம்மா வேறு, என் மகளுக்கு திருமணத்தில் இப்போதைக்கு விருப்பமே இல்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டதால், இந்த திருமண பெட்டிங் சூடுபிடித்துள்ளது.

ஹன்சி கைவசம் இப்போது 7 படங்கள் உள்ளன. அவற்றில் பிரியாணி உள்ளிட்ட இரு படங்கள் மட்டும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. சிம்புவுடன் நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் படங்கள் வருமா வராதா என்றே தெரியாத நிலை. மேலும் 3 படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டுள்ளது.

சிம்பு- ஹன்சிகா... நடக்குமா... நடக்காதா?- அட பெட் கட்றாங்கப்பா!!

தவிர, புதிய படங்களுக்கு கதை கேட்பதும், அட்வான்ஸ் வாங்குவதும் தொடர்கிறது. இந்தப் படங்கள் முடிய குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகும். அதுவரை இந்தக் காதல் நிலைக்குமா.. அதுவரை இந்தக் காதலை விட்டுவைப்பாரா டாக்டர் மோனா மோத்வானி (ஹன்சிகாவின் மம்மி) என்ற கேள்விகள் தொடர்வதால், இந்த காதல் பெட்டிங்கில், சிம்புவுக்கு வெற்றி கிடைக்காது என்பவர்கள் நம்பிக்கையோடு பணம் கட்டி வருகிறார்களாம்.

சிம்பு காதல் தோற்பதில் இவ்வளவு பேருக்கு சந்தோஷமா!!

 

கதையைக் கேட்டதும் புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுத்த எல்ரெட் குமார்!

தமிழ் சினிமாவில் துடிப்போடு இயங்கும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எல்ரெட் குமார்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா', ‘கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள் என அடுத்தடுத்து படங்கள் தந்தவர் எல்.ரெட் குமார்.

கதையைக் கேட்டதும் புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுத்த எல்ரெட் குமார்!

தற்போது ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா-துளசி நடிக்கும் ‘யான்' படத்தை தயாரித்து வருகிறார்.

திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவதிலும் முனைப்பு காட்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை டி.கே. என்ற இளைஞருக்குத் தந்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் முதல் படத்திலிருந்து பணியாற்றியவர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் எல்.ரெட்குமார் கூறும்போது, ‘கோ' படத்தில் பணிபுரியும்போதே எனக்கு டி.கே.வைத் தெரியும். அவரது உழைப்பையும், தொழில் பக்தியையும் கண்டு வியந்து இருக்கிறேன். கதையை கேட்டவுடனேயே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்துவிட்டேன். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தலைப்பு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்,' என்றார்.

 

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

சென்னை: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா கிளப்பியுள்ள சர்ச்சைகள், கசப்புணர்வுகள், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழும் வரை நீடிக்கும் போலிருக்கிறது.

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்றவர்களை அழைக்காமல் அவமதித்ததும் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ரஜினியை கடைசி வரிசையில் கடைசி நாற்காலியில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், 'விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது. ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். அது தவறாகிவிட்டது. ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்', என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

மற்ற கலைஞர்கள் தங்கள் வேதனையைக் கூட வெளிப்படுத்த முடியாத சங்கடத்தில் உள்ளனர்.

 

ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

சென்னை: சினிமா நூற்றாண்டு விழாவில் தனக்கு நேர்ந்த அவமானத்தை ரஜினி வெளிப்படையாக சொல்லிவிட்டார். மற்றவர்களால் சொல்ல முடியவில்லை என்று விழாவில் பங்கேற்ற பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்த விமர்சனங்கள் இப்போது பரபரப்பாக மீடியாவில் வர ஆரம்பித்துள்ளன.

இதை மேலும் பரபரப்பாக்கியுள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை. அந்த அறிக்கையில் தன் விமர்சனத்தை விட, பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களை ஹைலைட்டாக்கியுள்ளார் கருணாநிதி. அதுமட்டுமல்ல, செய்தியை எழுதியவர்களை பெயரைக் கூட அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சினிமா உலகைச் சேர்ந்த, விழாவில் புறக்கணிக்கப்பட்ட முக்கியமானவர்கள் பலரும் அடுத்து என்ன செய்வது என கூடிப் பேசி வருகிறார்கள்.

விழாவில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ரஜினி நண்பர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியது செய்தியாக வெளியான பிறகு, இதே நிலைக்கு ஆளான மற்ற கலைஞர்களும் வாய் விட்டுப் புலம்பி வருகிறார்கள். "அவராவது பரவால்ல, வாய்விட்டு சொல்லிவிட்டார். நாம பேசுனா... அதையும் யாராவது போட்டுக் குடுத்துட்டா என்ன பண்றது" என்றாராம் அந்த சாதனை நடிகர்.

ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

இந்த நிகழ்வுகள் குறித்து ஒரு கூட்டறிக்கை வெளியிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.

ஆனால், அடுத்த ஆட்சி மாற்றம் வரை அமைதியாகப் போகலாம். அரசு நிதியை கை நீட்டி வாங்கிய பின் கோபப்படுவதில் அர்த்தமில்லை என்று முதல்வருக்குப் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்திருந்த தயாரிப்பாளர்கள் இருவர் அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்தி வருகிறார்களாம்.

 

முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி சமந்தா!

சென்னை: விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிப்பார் என முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இதனை விஜய்யும் உறுதி செய்துள்ளார்.

முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி சமந்தா!

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அதிரடி என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் அதை இயக்குநர் முருகதாஸ் மறுத்துவிட்டார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

அதேநேரம் கதாநாயகியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘கொலவெறி' புகழ் அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் முருகதாஸ் தயாரிப்பில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராஜாராணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக தமிழில் இப்போதுதான் முதல்முறையாக ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. கடந்த ஆண்டு அவர் ஒப்பந்தமான பெரிய படங்களிலிருந்து திடீரென விலகியது நினைவிருக்கலாம்.

 

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

சென்னை: தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது... இனி தமிழ் சினிமாவுக்கென தனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா குரல் கொடுத்துள்ளார்.

ஞானக்கிறுக்கன் படத்தின் இசையை வெளியிட்ட பாரதிராஜா, பின்னர் பேசியதாவது:

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார்.

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

முதுகெலும்பு கிடையாது

தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.

சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில்தான் இருந்தார்கள்.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

அநாதைகளாக..

கன்னட- தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடிக்கிறது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.

'ஞான கிறுக்கன்' படத்தின் இயக்குனர் இளைய தேவன் என் மண்ணின் மைந்தன். என்னைப்போல் ஒப்பனை, பூச்சு எதுவும் இன்றி யதார்த்தமான கிராமத்து கதையை படமாக எடுத்துள்ளார். என் பாதையில் அவர் வருகிறார்," என்றார்.

 

சாண்டலின் கொந்தளிப்பு... தவிக்கும் ஹீரோ

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள்தான் சாண்டலும், எதிர்நீச்சல் போட்ட ஹீரோவும்.

இருவரும் இணைந்து இதுவரை படம் நடிக்க வில்லை. இவர்கள் இருவரையும் இணைக்க தயாரிப்பாளர்கள் நினைத்தாலும் சாண்டல் நடிகர் ஒத்துக் கொள்வதில்லையாம்.

எடுபிடி வேலை பார்த்தவன் ஹீரோவாக நடிக்கும் போது நான் அந்த படத்தில் காமெடியானாக நடிப்பதா? என்று எக்கச்செக்க டென்சன் காட்டுகிறாராம் சாண்டல்.

இதனால் செய்வதறியாது தவிக்கிறாராம் எதிர்நீச்சல் ஹீரோ. அது இது எது செய்த போது கூட இவ்வளவு சிக்கலில் ஹீரோவான பின்னர்தான் யார் எப்படி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று புலம்புகிறார் ஹீரோ.

சங்கத்தை வச்சுக்கிட்டு வருத்தப்படலாமா? என்று ஆறுதல் கூறுகின்றனர் அவரது நண்பர்கள்.

 

சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்: ஷாருக்

டெல்லி: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஷாருகான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் வசூலில் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தில் உள்ளது.

எனினும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள போராடுவதாக கூறியுள்ளார் ஷாருக்கான். டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகம் நடத்திய 40-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாருகான் பேசியதாவது:

"நான் எனது முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நான் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.எனது பயமே என்னை பெரியவனாக்குகிறது.

சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்: ஷாருக்

தோல்வி பயத்திலேயே நான் கடினமாக உழைக்கிறேன்.நான் ஒருநாளும் ஒய்வு எடுப்பதில்லை. நான் கடுமையாக வேலை செய்ய வில்லை என்றால் எனது இடைத்தை இழக்க நேரிடும்.

எனக்கு இரத்த அழுத்தம் இல்லை, இதய பாதிப்பு எதுவும் இல்லை ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன்.

தோல்வியே உங்களின் உண்மையான நண்பர்களை கண்டு பிடிக்க உதவும்.கடினமான சோதனை கட்டத்தில் தான் உண்மையான நட்பை அறிய முடியும். நான் ரா ஒன் படத்தினால் அதிக நண்பர்களை இழந்தேன்.அதுபோல் அதிகமான பார்வையாளர்களையும் இழந்தேன்.

சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் அதிகமான நண்பர்களை பெற்றேன் அதுபோல் புதிய எதிரிகளும் உருவாகி உள்ளனர்.

 

விழாவில் வாசலோடு திருப்பி அனுப்பப்பட்ட இசையமைப்பாளர்

சென்னை: சினிமாவை கொண்டாட நடந்த விழாவில் பழம்பெரும் அந்த 3 எழுத்து இசையமைப்பாளருக்கு அவமரியாதை நடந்துள்ளதாம்.

அண்மையில் சினிமாவை கொண்டாடும் விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவின் துவக்க நாள் அன்று பழம்பெரும் அந்த 3 எழுத்து இசையமைப்பாளர் விழா நடந்த இடத்திற்கு வந்துள்ளார். 60 ஆண்டுகள் இசையமைப்பாளராக ஜொலித்த அவரை நுழைவு வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் நிறுத்தியுள்ளனர்.

உங்களுக்கு அழைப்பு வைக்கவில்லை, விருது பட்டியலிலும் உங்கள் பெயர் இல்லை அதனால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்களாம்.

வேறு வழி இல்லாமல் அவரும் நொந்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதே நிகழ்ச்சியில் இசை உலகில் ஞானியான அந்த மனிதருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்தனைக்கும் திருப்பி அனுப்பப்பட்ட மனிதர் பெரிய இடத்திற்கு நல்ல பழக்கமானவரே, அப்படி இருந்தும் இப்படி நடந்துள்ளது.

 

இன்று ராஜா ராணி ரிலீஸ்: படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க?

சென்னை: ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி இன்று ரிலீஸாகியுள்ளது.

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நாஸிம் உள்ளிட்டோர் நடித்துள்ள ராஜா ராணி இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் நடிக்கும் ஆர்யா, நயன்தாரா திருமணத்திற்கே பத்திரிக்கை அடித்து ஜமாய்த்துவிட்டார்கள். இயக்குனர் ஆட்லீயிடம் கேட்டால் விளம்பரம் பாஸ் படத்திற்கு விளம்பரம் தான் முக்கியமாக உள்ளது என்றார்.

இன்று ராஜா ராணி ரிலீஸ்: படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜா ராணி இன்று ரிலீஸாகியுள்ளது. புதுமுக இயக்குனர் ஆட்லீ படத்தை எப்படி எடுத்துள்ளார், படத்தில் நிஜத்தில் கிசுகிசுக்கப்படும் ஜோடியான ஆர்யா, நயன்தாரா புதுமணத் தம்பதிகளாக எப்படி நடித்துள்ளார்கள் என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்று ராஜா ராணி ரிலீஸ்: படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க?

காதலர்கள் என்று கூறப்படும் ஜெய், நஸ்ரியா ஜோடி வேறு இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களின் கெமிஸ்ட்ரி பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் சினிமா ஆசிரியர் சங்கர் விடுப்பில் இருப்பதால் அவர் வந்து கையோடு விமர்சனத்தை எழுதுவார் என்று உறுதி அளிக்கிறோம்.

 

சினிமா விழாவில் மிரட்டி ஆட வைக்கப்பட்ட நடிகைகள்?

சென்னை: சென்னையில் நடந்த சினிமா விழாவில் நடனமாட மாட்டேன் என்று கூறிய சில நடிகைகள் மிரட்டி ஆட வைக்கப்பட்டார்களாம்.

சென்னையில் சினிமா விழா ஒன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் எனக்கு அழைப்பு வரவில்லை, உனக்கு அழைப்பு வரவில்லை என்று பலர் அலுத்துக் கொண்டனர். இந்நிலையில் விழாவில் நடனமாட சில முன்னணி நடிகைகள் மறுத்துவிட்டார்களாம்.

வழக்கமாக மேடை நிகழ்ச்சிகளில் ஆட நடிகைகளுக்கு பெரும் தொகை அளிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் ஆட பெரிய தொகை எல்லாம் கொடுக்கவில்லையாம். இதனால் பல நடிகைகளை நடனமாட மறுத்தார்களாம்.

அவ்வாறு மறுத்த நடிகைகளை மிரட்டி ஆட வைத்தார்களாம். அதிலும் ஆட மாட்டேன் என்று அடம்பிடித்த மங்கலகரமான ராய் நடிகையை மிரட்டி ஆட வைத்தார்களாம். மேலும் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து சொல்லும் நாட்டாமையின் மகளையும் கூட மிரட்டி ஆட வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு: ஜெய் நடிக்கும் சரஸ்வதி சபதம் பெயர் மாற்றம்

சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பினை அடுத்து ஜெய் நடித்த திரைப்படம் நவீன சரஸ்வதி சபதமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சரஸ்வதி சபதம்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இப்படத்தின் தலைப்புக்கான பிரச்சினையும் தொடங்கிவிட்டது. மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ‘சரஸ்வதி சபதம்' பக்தி திரைப்படத்தின் தலைப்பில் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக விளம்பரத்தோடு புதிதாக ‘சரஸ்வதி சபதம்' பெயரில் படம் எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று சிவாஜி கணேசனின் ரசிகர் மன்றங்கள் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பின் அவர்களுடோடு பேச்சுவார்த்தை நடித்தி சுமூகமாக பேசித் தீர்த்த படக்குழு தற்போது இந்த படத்திற்கு ‘நவீன சரஸ்வதி சபதம்' என்று பெயரிட்டுள்ளனர்.

சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு: ஜெய் நடிக்கும் சரஸ்வதி சபதம் பெயர் மாற்றம்

முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சந்துரு இயக்குகிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பிரேம்குமார் என்பவர் இசையமைக்கிறார். இவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது, எவரது மனத்தையும் புண்படுத்தாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்றார்.

 

தலைமறைவான ‘அண்டங்காக்கா’ நடிகை...தேடித் திரியும் தயாரிப்பாளர்கள்

பிரச்சினையில் சிக்கி ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வரும் ராஜா படத்தில் ஒரே ஒரு குத்துக்கு ஆடியுள்ளார் அந்நியி நடிகை.

படம் குறித்து நாயகனிடம் கேட்கப்பட்ட போது கூட, ‘ படத்தில் நடித்த இருநாயகிகளை விட தன் மனம் கவர்ந்தவர் கொண்டக்காரி நடிகை தான்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து அதே போன்று ஐயிட்டம் பாடல் வாய்ப்புகளாக வருவதால், மன்முடைந்த நாயகி தற்போது தலைமறைவாகி விட்டாராம்.

அடப்பாவிகளா, இனி என் கதாநாயகி கனவு அவ்வளவு தானா என சிங், மணி`நடிகைகள் வரிசையில் தற்போது இவரும் புலம்ப ஆரம்பித்து விட்டாராம்.

 

ரஜினி ரசிகர் பாபு.தூயவன் இயக்கும் முதல் படம் ‘கதம் கதம்’!

ரஜினி ரசிகர் பாபு.தூயவன் இயக்கும் முதல் படம் ‘கதம் கதம்’!

சென்னை: ஏற்கனவே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு பெயராக வைக்கும் டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது, பிற படங்களில் பேசப்பட்ட பிரபல வசனங்களை புதிய படங்களுக்கு பெயராகச் சூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, இங்க என்ன சொல்லுதுனா படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் ஒன்று புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.

பாபா படத்தில் ரஜினி அடிக்கடி பேசும் வார்த்தைகளான "கதம் கதம்" (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் தற்போது ஒரு புதிய படத்தின் தலைப்பாகி இருக்கிறது.

இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்க, நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார்.

பாபு.தூயவன் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கையே தலைப்பாக வைத்திருக்கிறாராம்.

 

நீங்க சொன்னா சரியா இருக்கும்ஜி... காட்பாதரிடம் சரணடைந்த நடிகர்

சென்னை: நீச்சல் நாயகனை அறிமுகப்படுத்தியது என்னவோ வோறொரு ஒல்லி இயக்குநர் தான். சென்னை கடற்கரை பெயரில் உருவான படத்தில் அறிமுகமான நடிகர், கொலைவெறி படத்தில் நடித்த போது சூப்பர் மருமகனின் திக் பிரண்டான கதை எல்லாரும் அறிந்தது தான்.

தனது தயாரிப்பில் நீச்சலை போட்டு நண்பர்கள் இருவருமே பயனடைந்தனர். அப்படம் மூலம் இன்னும் பிரபலமான நீச்சல்நடிகர், அதிலிருந்து தனது நண்பரை தனது காட்பாதர் ஆக்கிவிட்டாராம்.

தான் எந்த படத்தில் நடிக்கலாம், எவ்வளவு சம்பளம் கேட்கலாம் என எல்லாமே தோழரின் அட்வைஸ் தானாம். பிசியாக இருந்தாலும் கூட நண்பனின் கேரியர் விஷயத்திலும் கவனமாக இருக்கிறாராம் நடிகர்.

நண்பேண்டா....

 

நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர்? இளம் நடிகர்கள் ஆதரவு

சென்னை: நடிகர் சங்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நடிகர் சங்கத்தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நாசர் பின்னால் விஷால் குருப் அணிவகுத்து நின்றது.

பொதுக்குழுவில் விஷால், சூர்யா, கார்த்தி, ஆர்யா, சந்தானம், ஜெயம் ரவி, ஜீவா, நிதின்சத்யா, ஆகிய இளம் ஹீரோக்களுடன் சிவக்குமார், நாசர், எஸ்.வி.சேகர், பொன்வண்ணன் ஆகியோர் ஒரு குழுவாக இருந்தனர்.

நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர்? இளம் நடிகர்கள் ஆதரவு

இளம் ஹீரோக்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை, நீலநிற ஜீன்ஸ் அணிந்து வந்தனர். எனவே இவர்களை நீலப்படை என்றே வர்ணித்தனர். இவர்கள் அனைவரும் தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடி 33 கேள்விகளை தயார் செய்து வந்தனராம்.

சரத்குமாரிடம் விஷால், ஜீவா, நாசர் மூவரும் 33 கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, மூச்சு திணறிப் போகும் அளவுக்கு சரத்குமார் குரூப் சோர்வடைந்தனர்.

புதிதாக வாங்கப்பட்ட ப்ளாட் நடிகர் சங்கம் பெயரில் வாங்காமல் தலைவர், பொதுச்செயலாளர், பெயரில் ஏன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ஜீவா கேள்வி கேட்கவே,

இவர்களைத் தொடர்ந்து பேசிய நாசர், நீங்கள் தவறு செய்திருப்பதால்தானே நீதிபதி இதற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளார் என்று கேட்டார்.

இவர்களை அடுத்துப் பேசிய ராதிகா அழுதே விட்டாராம். தலைவர் பதவிக்குப் போட்டி போட வேண்டாம் என்று என் கணவரை சொன்னேன். ரவிதான் என்னை சமாதானம் செய்து இந்த முறை என் கணவரை நடிகர் சங்கத்தலைவர் ஆக்கினார். நடிகர் சங்கப் பிரச்சினையில் என் கணவர் என்னென்ன செய்திருக்கிறார் என்று தெரியும் என்று பட்டியலிட்டாராம் ராதிகா. அதற்குப் பிறகுதான் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகச் சொன்னார்களாம்.அதனாலேயோ என்னவோ, விஷால் குரூப் நாசரைத் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்ல கடந்த 21ம்தேதி நேரு ஸ்டேடியத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவிலும் நாசர் எங்கே சென்றாலும் அவர் பின்னாலேயே சூர்யா, கார்த்தி,விஷால்,ஜெயம்ரவி, ஆர்யா என்று நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து சென்றது.

அடுத்து நடக்கும் நடிகர்சங்க தேர்தலில் இந்த இளம்படை நாசரைத் தலைவராக்க முடிவுசெய்து இருக்கிறதாம்!

 

மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே: குமரிஅனந்தன் அறிக்கை

மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே: குமரிஅனந்தன் அறிக்கை

சென்னை: மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே என அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்.

சென்னையில் தென்னிந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள வேளையில், மலையாளச் சினிமாவின் தந்தை ஒரு தமிழர் என அறிக்கை விடுத்துள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தமிழர் குமரிஅனந்தன்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘சென்னையில் நடைபெறும் சினிமா நூற்றாண்டு விழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. மலையாள சினிமாவின் தந்தை என் ஊராகிய அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜே.சி.டேனியல் என்ற தமிழரேயாவார். 1928-ல் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நிலையத்தை தொடங்கி அவர் தயாரித்து 1930-ல் வெளியிட்ட விகத குமாரன் என்பதே முதல் மலையாள படம்.

இந்த அங்கீகாரம் பெரும் பாடுபட்டு 6 ஆண்டுகளுக்கு பின் கேரள அரசிடம் பெறப்பட்டது. இப்போது ஆண்டுதோறும் கேரள அரசு மலையாள திரைப்பட வாழ்நாள் விருது ஜே.சி.டேனியல் பெயரால் வழங்கி வருகிறது. நான் இச்சாதனையாளரை சந்தித்து இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

படம் வர்றதுக்கு முன்னாடியே நெட்டில் லீக் செய்தால் எப்படிப்பா.. சமந்தா வேதனை

சென்னை: ஆந்திரா பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்த அத்தரின்டிக்கி தாரெடி திரைக்கு வரும் முன்னரே படத்தின் பெரும்பகுதி இணையத்தில் வெளியானதில் அப்படத்தின் கதாநாயகி சமந்தா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘அத்தரின்டிக்கி தாரெடி'. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்' படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து ‘அத்தரின்டிக்கி தாரெடி' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள்.

படம் வர்றதுக்கு முன்னாடியே நெட்டில் லீக் செய்தால் எப்படிப்பா.. சமந்தா வேதனை

ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் தெலுங்கானா பிரச்சினையால் காலதாமதம் ஆனது. தசரா விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், 90 நிமிடஅளவுக்கு படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதிப் படம் வெளியாகி விட்டது.

இந்நிலையில், அப்படத்தின் நாயகியான சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அத்தரின்டிக்கி தாரெடி' படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். நல்ல படங்களுக்கு உங்கள் ஆதரவு தொடரட்டும். இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்' எனத் தெரிவித்துள்ளார்.

 

ரூ. 20 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது?

ரூ. 20 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது?

சென்னை: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி, பண மோசடி செய்து விட்டதாக வடமாநில என்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் சீனிவாசன் தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறியதாகவும், அதற்கு முன்பணமாக தாம் ரூ.20 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

 

அமெரிக்காவுக்கு ஒபாமா... தமிழகத்துக்கு அம்மா... விவேக் காமெடி

அமெரிக்காவுக்கு ஒபாமா... தமிழகத்துக்கு அம்மா... விவேக் காமெடி

சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர், நடிகையர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு காமெடி நடிகர் விவேக் நகைச்சுவை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

தியாகராஜ பாகவதர் கெட்டப்பில் மன்மத லீலையை வென்றார் உண்டோ என பாடியபடி காமெடி நடிகர் விவேக் மேடையில் தோன்றியதும் களை கட்டியது.

நகைச்சுவை நடிகர் செல் முருகன் தியாகராஜ பாகவதராக வந்த விவேக்கிடம் பேட்டி எடுத்தார்.

நான்தான் கதாநாயகன்

கேள்வி:- எதற்கு வந்தீர்கள்?

பதில்:- சினிமா நூற்றாண்டு வைபவத்தை பார்க்க வந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது.

கே:- அனுஷ்கா, அமலாபால் அப்பா வேடத்திலா?

ப:- கிராதகா நான் கதாநாயகனாகத்தான் நடிப்பேன்.

கே:- நாயகனாக நடிக்க சிக்ஸ்பேக், பிக்கெப் எல்லாம் வேண்டுமே?

சூர்யா - ஆர்யா

ப:- சிக்ஸ்பேக்குக்கு சூர்யா இருக்காரே பிக்கெப்புக்கு ஆர்யா இருக்காரே.

கே:- நாயகனாக நடிக்க பைக் வீலிங் சாகசம் தெரியனுமே

ப:- பைக் சாகசம் 'தல'க்கு மட்டும்தான் சரியா இருக்கும்.

அனிருத் கொலை வெறி

புதியவர்கள் பிரமாதமாக நடிக்கிறாங்க அனிருத்னு ஒரு இசை அமைப்பாளர். பேன்ட் சட்டை சேர்த்து உடம்பின் மொத்த எடையே 3 கிலோதான் இருக்கும். கொலை வெறி பாட்டு போட்டு கலக்குகிறார்.

பிரியாமணியை பிடிக்கும்

கே:- கவுண்டமணி பிடிக்குமா போண்டோ மணி பிடிக்குமா?.

ப:- பிரியாமணியை பிடிக்கும்.

பஞ்ச் வசனம்

கே:- பஞ்ச் வசனம் தெரியுமா?

ப:- அமெரிக்காவுக்கு ஒபாமா, நமக்கு நம்ம அம்மா.

இயக்குநர்கள் நாடகம்

டைரக்டர்கள் மனோஜ் குமார், ரவிமரியா இருவரும் மேடையில் நடத்திய சூட்டிங் பற்றிய நாடகம் கரகோஷம் எழுப்ப வைத்தது.

ஸ்டண்ட் நடிகர்கள் அசத்தல்

ஸ்டண்ட் நடிகர்கள் உடம்பில் ஒளிரும் அலங்கார மின் விளக்குகள் பொருத்தி இருட்டுக்குள் மயிர் கூச்செரியும் சண்டை காட்சிகளை நடத்தி பிரமிக்க வைத்தனர்.

 

சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!

சென்னை: இன்று மாலை நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கர்நாடக, தெலுங்கு முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகள், மனஸ்தாபங்களுக்கிடையே நடந்து வருகிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா.

முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிருப்திக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.

கன்னடம், தெலுங்கு, மலையாள சினிமா நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக நடந்து வந்தன. இன்று நிறைவு விழா.

சினிமா நூற்றாண்டு விழா: கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை!

இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

ஆந்திர, கேரள மற்றும் கர்நாடக முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்றை அரசு விளம்பரத்திலும் அவர்கள் பெயர் இல்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி மட்டும் வருகிறார்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

 

சொந்தக் குரலில் பாட... ரொம்பநாளா ஆசைப்படும் ‘டைம்’நடிகை

ஏற்கனவே, யோக நேரமாக இருப்பதால் தான் ஒருபடம் வெளிவந்த நிலையிலேயே பல முண்ணனி நடிகளுக்கு போட்டி நாயகி ஆகிவிட்டார் அம்மணி.

இந்நிலையில், தனக்கு பாடும் ஆசை இருப்பதாக சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் தெரிவித்துள்ளாராம் நடிகை. பாடகியின் இனிமையான குரலும், கிளிப்பேச்சும் கேட்டு ஏற்கனவே மயங்கிப் போயிருக்கும் ரசிகர்கள் விரைவில் நடிகையின் குயிலோசை பாடலையும் கேட்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

கொலைவெறி நாயகன் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடி வரும் சூழ்நிலையில், அவருடன் உடன் நடித்த நாயகியும் தற்போது பாட்டுப்பாட ஆசை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ( முன்னாடியே சொல்லிருந்தாவது ஒரு டூயட் சாங் ரெடி பண்ணிருப்பாங்க...)

புதிய பாடகர்களை அறிமுகப் படுத்துவதையே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ள இன்சியல் இசையமைப்பாளர் காதுக்கும் இந்தத் தகவல் போகாமலா இருக்கும்.

 

நயன ராணியைத் தவற விட்ட வாலிபர் சங்க தலைவர்...

விரைவில் வெளியாகவுள்ள கிங் அண்ட் குயின் படத்தின் இயக்குநர் முன்பு பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த போது ஒரு குறும்படம் எடுத்தாராம்.

அதில், நீச்சல் நாயகன் தான் ஹீரோவாக நடித்தாராம். அப்போதே இயக்குநரின் மனக் கண்ணில் கிங் படத்தில் இந்த நடிகர் தான் ஹீரோ என முடிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால், தயாரிப்பாள இயக்குநர் கதைக்கு கடவுள் நடிகர் ஹீரோவானால் தான் கல்லா கட்டும் எனத் தெரிவித்து விட, வேறு வழியில்லாமல் ஓகே சொன்னாராம் இயக்குநர்.

விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தில் நம்பர் நடிகை மற்றும் கடவுள் நடிகை கெமிஸ்ட்ரியைப் பார்த்து, ‘வட போச்சே' என புலம்பித் தள்ளுகிறாராம் நீச்சல் நடிகர்.

 

'த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?'

-இப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்டு செய்தி.

என்ன நடந்தது?

சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள்.

உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார்.

'த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?'  

அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம்.

த்ரிஷா - நள்ளிரவு மது விருந்துகள் - கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது.

பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

 

தீபாவளி ரேஸில் குதித்தது விஷாலின் பாண்டிய நாடு!

ஏற்கெனவே மூன்று படங்கள் தீபாவளிக்கு வரிசை கட்டி நின்றபடி 900 தியேட்டர்களைக் கேட்டுக் கொண்டிருக்க, அடுத்ததாக களமிறங்கியிருக்கிறது விஷாலின் பாண்டிய நாடு.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாராகும் முதல் படம் இது. சுசீந்திரன் இயக்க, டி இமான் இசையமைத்துள்ளார்.

முதல் முறையாக விஷாலும் லட்சுமி மேனனும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

தீபாவளி ரேஸில் குதித்தது விஷாலின் பாண்டிய நாடு!

இந்தப் படத்தை தீபாவளி ஸ்பெஷலாக களமிறக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் விஷால்.

மதகஜராஜா திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், இந்தப் படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிடவிருந்தார் விஷால். ஆனால் மதகஜராஜாவுக்கு சிக்கல் இன்னும் தீராததால், தீபாவளிக்கு பாண்டிய நாடு படத்தை வெளியிடலாம் என களமிறங்கியுள்ளார்.

ஏற்கெனவே ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளன. இந்தப் படங்களுக்கு 900 தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 700 அரங்குகள்தான் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில் விஷால் படமும் வந்தால் எப்படித் தியேட்டர்களை ஒதுக்குவது என திணறிப் போயுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.

 

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
4.0/5

நடிப்பு: ஷாம், பூனம் கவுர், ரமேஷ்
ஒளிப்பதிவு: கிருஷ்ணசாமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: ஷாம்
வெளியீடு: ஸ்டுடியோ 9
இயக்கம்: வி இஸட் துரை

பாசம் என்பது எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதல்ல... அது உணர வேண்டிய விஷயம். ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் பார்த்த ஒவ்வொரு கணமும் பாசத்தின் மேன்மையும் வலியும் இதயத்தை உரசிக் கொண்டே இருந்ததென்றால் மிகையல்ல.

இத்தனைக்கும் இந்தப் படம் ஒன்றும் தவறுகளே இல்லாத உன்னதமான படம் அல்ல. தவறே இல்லாமல் படமெடுக்கும் பர்பெக்ஷனிஸ்ட் இன்னும் இந்த சினிமா உலகில் பிறக்கவே இல்லை. ஆனால் அந்தத் தவறுகள் எதுவும் பிரதானமாய் நின்று பார்வையாளனை உறுத்தவில்லை.

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

அங்கேதான் 6 படம் உயர்ந்து நிற்கிறது, வெற்றியைத் தொடுகிறது.

நிச்சயம் இந்தப் படம் ஒரு சின்சியரான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. காமெடி, பாட்டு என நேரத்தைக் கொல்ல முயற்சித்து பார்வையாளரைக் கொல்லாமல், நேரடியாக விஷயத்தைக்கு வந்துவிடுகிறார் இயக்குநர்.

ஒரு சின்ன, ஆனால் வலுவான இழைதான் கதை...

தன் மகனின் 6வது பிறந்த நாளன்று குழந்தையுடன் மெரினா பீச்சுக்குப் போகிறார்கள் ஷாமும் அவர் மனைவி பூனம் கவுரும். ஒரு சின்ன கவனக்குறைவான தருணத்தில் குழந்தை காணாமல் போகிறான்.

போலீசுக்குப் போகிறார்கள். பலனில்லை. ஒரு போலீஸ்காரர் கொடுக்கும் க்ளூ, கார் ஓட்டுநர் தரும் தகவல்களை வைத்துக் கொண்டு தானே குழந்தையைத் தேடிப் புறப்படுகிறார் ஷாம். வராங்கல், மும்பை, போபால், புனே, கொல்கத்தா என நாடு முழுக்க நீள்கிறது அவர் தேடல். போகும் இடமெல்லாம் பிள்ளைக் கறி தின்னும் கொடியவர்களின் கூடாரங்கள்... மானுட ஜென்மமே பாவம் என வெறுக்க வைக்கும் அளவுக்கு கொடுமைகள்...

அந்தக் கொடுமைகளை முடிந்தவரை அழுத்தமாகவும் நம்பகத்தன்மையுடனும் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஷாமின் உழைப்புக்கு எழுந்து நின்று கைத்தட்டி.. அவர் தோள்தட்டிப் பாராட்ட வேண்டும். தன் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தோற்றத்தில் அசாதாரண மாற்றங்களைச் செய்த அவர், அதை எல்லோருக்கும் காட்டும் வகையில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. ஜஸ்ட் போகிற போகிற போக்கில், அந்தக் கதாபாத்திரம் பட்ட சிரமங்களைக் காட்டுவது போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதுவே அவர்கள் மீது புதிய மரியாதையைத் தருவதாக உள்ளது.

போபாலில், மகன் கிடைக்கவிருக்கும் தருணத்தில், தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சும் சிறுமியை உதறவும் முடியாமல், அந்தப் பெண்ணின் சோகத்தைத் தாங்கவும் முடியாமல் ஷாம் பதறுமிடம் அவர் நடிப்பில் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார் என்பதற்கு சான்று. அந்தப் பெண்ணைக் காப்பாற்றி நகரின் பிரதான பகுதிக்கு வரும் அவர் எதிரில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தைக் காட்டி, 'இங்கே போ.. நல்லவர்கள் இருக்கிறார்கள்.. காப்பாற்றுவார்கள்,' என்று கூறிவிட்டு மீண்டும் மகனைத் தேடிப் போவார். எத்தனை நம்பிக்கை!

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

எங்கெங்கிருந்தோ கடத்தப்பட்டு வந்த சிறுவர்களை கொல்கத்தாவின் இருட்டறையில் அடைத்து அழுக்கு குப்பைகளுக்கு மத்தியில் அடித்து உதைத்து சோறுபோடும் காட்சி கண்களைக் குளமாக்கியது. இது சினிமா காட்சி மட்டுமல்ல, நிஜமான உண்மை என்பதை உணர்ந்து மனம் பட்ட பாட்டை எழுத வார்த்தைகளுக்கு வலிமையில்லை. அந்தக் காட்சியில் திரும்பத் திரும்ப 'இது கொடும பாய்... ஏன் இப்படி பண்றாங்க...இவங்கள்லாம் மனுசங்களே இல்லையா' என்ற ஷாமின் வேதனைக் கதறல் இன்னும் காதுகளை விட்டு அகலவில்லை.

குழந்தை திரும்பக் கிடைப்பான் என காத்திருந்து வெறுத்து வேதனை மிஞ்சி, 'தொலைந்து போன மகனைத் தேடுவதை விட்டுவிடு.. உனக்கு எத்தனை குழந்தை வேண்டுமானாலும் நான் பெத்துத் தர்றேன்.. நீ திரும்பி வா' என கணவனிடம் போனில் கதறுகிறாள் மனைவி. அவளை ஆற்றுப்படுத்திவிட்டு, தன் மகனைத் தேடும் முயற்சியைத் தொடரும் அந்தத் தந்தையை, தம்பதியை படமாக்கிய யதார்த்தம் இதுவரை பார்க்காதது. அந்தக் காட்சியில் பூனம் கவுர் ஒரு சினிமா நடிகையாகவே தெரியவில்லை.

அந்தக் க்ளைமாக்ஸ்... அத்தனை இயல்பு...!

6 மெழுகுவர்த்திகள்- சிறப்பு விமர்சனம்

(6 மெழுகுவர்த்திகள் படங்கள்)

டாக்சி ஓட்டுநர் ரங்கனாக வரும் ரமேஷ் மனதில் பதிந்துவிட்டார். பாந்தமான இயல்பான நடிப்பு.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, இந்தியாவின் இன்னொரு படுபயங்கர பக்கத்தை அத்தனை நிஜமாகப் பதிவு செய்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா சீரியஸாகக் கொஞ்சம் முயற்சி செய்திருப்பது தெரிகிறது.

நான்கைந்து பாத்திரங்களை மட்டுமே வைத்து, மிகக் கச்சிதமாக காட்சிகளைத் தொகுத்திருந்ததால், படத்தில் ஹீரோயிசம் தலைதூக்கும் அந்த சண்டைக் காட்சிகளில் கூட லாஜிக் பார்க்க முடியவில்லை.

ரொம்ப நாளைக்குப் பிறகு தலைப்புக்குப் பொருத்தமான கதை, காட்சிகளோடு வந்த படம் இந்த 6!

படம் முடிந்தபோது, வீட்டுக்குப் போன் செய்து, 'பையனை எங்கும் வெளியில அனுப்பாதே. நான் வர்ற வரைக்கும் பத்திரமா பாத்துக்கோ' என்று மனைவியை எச்சரிக்கும் கணவர்களைப் பார்க்க முடிந்தது. ஒரு சினிமாவுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்!

வாழ்த்துகள் ஷாம், துரை!

Shaam's 6 Mezhuguvarthikal is a sincere effort to give a good and meaningful cinema.

 

பாண்டியநாடு படத்தில் டீச்சராக வரும் லட்சுமி மேனன்

சென்னை: நிஜவாழ்க்கையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியான லட்சுமி மேனன், பாண்டிய நாடு படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்துள்ளாராம்.

பாண்டியநாடு படத்தில் டீச்சராக வரும் லட்சுமி மேனன்

விஷால் தயாரித்து நடிக்கும் படமான பாண்டிய நாடு படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமிமேனன். இயக்கம் சுசீந்திரன். தீபாவளியன்று ரிலீசாக உள்ள இப்படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

சென்ற ஆண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்வான நடிகை லட்சுமி மேனன், தற்போது திரைப்படங்களில் நடித்தபடியே பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ரியல் வாழ்க்கையில் பள்ளி மாணவியாக உள்ள லட்சுமி மேனன், இப்படத்தில் ஆசிரியராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் போஸ்டரைப் பார்க்கும் போது, லட்சுமி மேனனின் மேக்கப், ‘காக்க காக்க' படத்தில் வரும் ஜோதிகாவை நினைவூட்டுகிறது.

 

புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்!

புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்.

கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார்.

ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்தா மற்றும் வெண்மணி படங்களை இயக்கியவர்.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். இந்த படத்தில் நிழல்கள் ரவி, மீனாள், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்திற்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். ஜி.சிவசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஓகேனக்கல், பாலக்கோடு, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விரைவில் படம் வெளியிடப்பட உள்ளது.