சென்னை: சிம்பு தனது முன்னாள் காதலியான நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிம்புவும், நயன்தாராவும் காதலித்தார்கள், ஜோடியாக வலம் வந்தார்கள், பிரிந்தார்கள். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவையும், நயன்தாரா பிரபுதேவாவையும் காதலித்து பிரிந்தனர். தற்போது நயன்தாராவும், சிம்புவும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகின்றனர்.
நயன்தாராவையும், ஹன்சிகாவையும் தான் உண்மையாக காதலித்ததாகவும், அவர்கள் தான் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்றும் சிம்பு அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் நயனும், ஹன்சிகாவும் எளிதில் மனதை மாற்றிக் கொண்டனர் என்றார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி நயன்தாரா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் மீது வருத்தம் உள்ள போதிலும் சிம்பு அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிம்புவின் ட்வீட் இதோ,
Many more happy returns of the day nayan :) have a fantastic year ... God bless u
— STR (@iam_str) November 17, 2014 பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன் :) இந்த ஆண்டு அருமையானதாக அமையட்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment